வருமான வரியை விடுங்க.. சென்னையை உலுக்கிய ரூ.6000 வெள்ள நிவாரண தொகை.. புளியந்தோப்பில் கொடுமை பாருங்க
சென்னை : நேற்று ஒரே நாளில் 2 குடும்பங்களில் நடந்த சம்பவங்கள் சென்னையை உலுக்கிவிட்டுள்ளன.. இந்த 2 சம்பவமும் வெள்ள நிவாரணம் 6000 ரூபாய் சம்பந்தப்பட்டவையாகும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை, தமிழக அரசு சார்பில் ரேசன்கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மத்திய,மாநில அரசு உயர் அதிகாரிகள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், பாதிப்பை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது.

டோக்கன்: எனவே, டோக்கன் பெற்று பணம் வாங்க வரும் பயனாளிகளை விட, விண்ணப்பம் பெற்று நிவாரணம் கோரும் பொதுமக்கள் எண்ணிக்கையே, தினந்தோறும் அதிகரித்து காணப்படுகிறது.. வருமானவரி செலுத்துபவர்களுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும்கூட, ஒரே குடியிருப்பில் வருமான வரி செலுத்தும் சிலருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றும், மற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
சில இடங்களில், விண்ணப்பம் இல்லாததால் பொதுமக்கள் திரும்பி செல்கிறார்களாம். சில இடங்களில், சம்பந்தப்பட்ட அலுவலர்களே விண்ணப்பம் வழங்குவதை குறைத்து வருகிறார்களாம். சில இடங்களில், தங்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படவில்லை என்று கூறி மறியல் நடந்து வருகிறது.
என்ன நடந்தது?: இப்படி நிவாரண தொகை குறித்த சலசலப்புகளும், அதிருப்திகளும் வெடித்து வரும்நிலையில், இந்த நிவாரண தொகையை வைத்து, குடும்பத்தில் தகராறுகள் வெடித்து வருவது வேதனையை தந்து வருகிறது.

சென்னை வியாசர்பாடி காமராஜர் நகர் 8வது தெருவை சேர்ந்தவர் பண்பழகன்.. 51 வயதாகிறது.. இவர் ஒரு என்ஜினியர்... இவரது முதல் மனைவி இறந்துவிட்டார்.. அதனால், கடந்த 2019ம் ஆண்டு, மகாலட்சுமி என்பவரை 2வது கல்யாணம் செய்து கொண்டார்.
தம்பதி: இந்த தம்பதிக்குள் நிறைய கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால், நாளுக்கு நாள் இருவருக்குள்ளும் தகராறும், சண்டையும் வந்துபோயின.. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மகாலட்சுமி, மழைவெள்ள நிவாரண தொகையாக 6 ஆயிரம் ரூபாயை வாங்கி கொண்டு வந்தார்.. அந்த 6 ஆயிரம் ரூபாய் பணம் தனக்கு வேண்டும் என்று பண்பழகன் கேட்டிருக்கிறார்.
ஆனால், பணத்தை தர முடியாது, தனக்கு 6 ஆயிரம் ரூபாய் தேவையாயிருக்கிறது என்று மகாலாட்சுமி சொல்லி உள்ளார். இதைவைத்தே அவர்களுக்குள் பிரச்சனை வெடித்துள்ளது.. வாக்குவாதம் முற்றியுள்ளது.. கடைசியில் அடிதடை வரை சென்றுவிட்டது.
மகாலட்சுமி: ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மகாலட்சுமி, கிச்சனுக்குள் ஓடிச்சென்று, காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, கணவரின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.. இதில் வலியால் துடிதுடித்த பண்பழகன், ரத்தவெள்ளத்திலேயே அங்கேயே சுருண்டு விழுந்தார்.. இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கப்பக்கத்தினர் ஓடிவந்து, பண்பழகனை மீட்டு, பெரியார் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்..
அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இதனிடையே, தன்னுடைய மீது பண்பழகன் செம்பியம் போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும், வழக்குபதிவு செய்து விசாரணையை, மகாலட்சுமியிடம் மேற்கொண்டு வருகிறார்கள்..
புளியந்தோப்பு: இதுபோலவே, ஒரு சம்பவம் புளியந்தோப்பில் நடந்துள்ளது.. வேலு என்பவர் ஆட்டோ டிரைவராக உள்ளார்.. இவரது 2 மகள்களுக்குமே திருமணமாகிவிட்டது.. அவர்கள் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால், வேலு, தன்னுடைய மனைவி பாளையத்துடன் தனியாக வசித்து வந்துள்ளார்.. நேற்றைய தினம், அங்குள்ள ரேஷன் கடையில் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண நிதி ரூ.6000 வாங்கிக்கொண்டு பாளையம் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது அவரை மறித்து வேலு, 6000 ரூபாயில், 1000 ரூபாய் தனக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார்.. அதற்கு பாளையம், "எவ்வளவு பணம் கொடுத்தாலும் குடிச்சே அழித்து விடுவாய்" என்று சொல்லி வெறும் 500 ரூபாய் தந்துள்ளார். அந்த 500 ரூபாயை வாங்கிக்கொண்டு போன வேலு, நேராக ஒயின்ஷாப்புக்கு சென்று தண்ணி அடித்துள்ளார்..
தற்கொலை : பிறகு தலைக்கேறிய போதையுடன் வீட்டுக்கு வந்து மறுபடியும் பணம் கேட்டு மனைவியுடன் தகராறு செய்தார்.. பிறகு, போதையிலேயே வீட்டிலுள்ள ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இதுபற்றி தகவல் கிடைத்ததும் பேசின்பிரிட்ஜ் போலீசார், வேலுவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications