முதல்வர் விஜய் தொகுதி உட்பட.. தமிழ்நாடு முழுவதும் RSS இன்று பேரணி! வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி உட்பட, சென்னையில் 7 இடங்களிலும்.. தமிழகம் முழுவதும் RSS அமைப்பின் பேரணி இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை RSS அமைப்பின் செயல்பாடுகளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் அனுமதி வழங்கப்படாது. தவெக ஆட்சியிலும் அப்படித்தான். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி, பேரணிக்கு RSS அனுமதி பெற்றிருக்கிறது.

RSS Tamil Nadu

RSS இயக்கத்தின் நிறுவன நாளை முன்னிட்டு, அக்.25 (இன்று) மற்றும் நவ.1 ஆகிய தேதிகளில் பேரணிக்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து அமைப்பின் மாநில செயலாளர் ஜெகதீசன் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். நீதிமன்றம் பேரணி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது. சென்னையில் முதலமைச்சர் விஜய்யின் தொகுதியான பெரம்பூர், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் என 7 இடங்களிலும், ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 128 இடங்களிலும் இன்று RSS பேரணியை நடத்துகிறது.

கொளத்தூரில் நடைபெறும் பேரணியில் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான RSS பொறுப்பாளர் பி.எம்.ரவிக்குமார் பங்கேற்கிறார். நீதிமன்றம் மற்றும் காவல்துறை பிறப்பித்த உத்தரவுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என RSS-க்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

குறிப்பாக பேரணி செல்லும்போது குறிப்பிட்ட மதம், சாதி குறித்து அவதூறு கருத்துக்களையோ.. இழிவு கருத்துக்களையோ முழக்கங்களாக எழுப்ப கூடாது. அதேநேரம் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பேரணியின் வழித்தடத்தை மாற்றும் உரிமை காவல்துறைக்கு இருக்கிறது. பேரணியில் பங்கேற்பவர்கள் கையில் கத்தி, கம்புகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

பேரணியில் பங்கேற்பவர்கள் காக்கி நிறத்தில் பேண்ட், வெள்ளை சட்டை மட்டுமே அணிந்திருக்க வேண்டும் என நீதிமன்றம் கறாராக கூறியிருக்கிறது. இந்த விதிகளை பின்பற்றுவதாக உறுதியளிப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின்னர்தான் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

என்ன விதிமுறைகள் வகுக்கப்பட்டாலும், வட மாநிலங்களில் RSS அமைப்பினர் மேற்கொள்ளும் பேரணியின்போது நடக்கும் மோதல்கள், அமைப்பின் மீதான நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர். அந்த வகையில் இன்றைய பேரணி பாதுகாப்பான முறையில் நடக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+