Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்டாய கல்வி.. மாணவர் சேர்க்கை இன்று தொடக்கம்! ஏற்கனவே சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் பயிலும் 25% மாணவர்களின் கட்டணத்தை மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்தது. தற்போது இந்த நிதி விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று முதல் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், ஏற்கெனவே சேர்க்கப்பட்ட மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தகுதியானவர்களாக இருப்பின் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

RTE Tamil Nadu education

இது குறித்து அரசு விடுத்துள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கான மற்றும் கட்டாயக் கல்வி disunto, 2009 (RTE Act) -2025-26 மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து வாடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

W.P. No. 18427 of 2025 V. Eswaran vs. Government of Tamil Nadu & Others ல், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம், RTE நிதி ஒதுக்கீட்டை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samagra Siksha) திட்டத்திலிருந்து பிரித்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020 (ΝΕΡ 2020) мода PM SHRI என்பனவற்று வழங்கல் இணைக்கப் (MOU) என்றும் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு மனு (SLP) தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவிப்பு வழங்கியதைத் தொடர்ந்து ஒன்றிய அரசு தன்னுடைய நிதிப் பங்களிப்பை விடுவித்துள்ளது. கல்வியாண்டிற்கான RTE தொடங்கப்பட்டுள்ளது.

2025-26 சேர்க்கை நடைமுறைகள்

2025-26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை சிறப்பம்சங்கள்

1. சேர்க்கை ஒதுக்கீடு

அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில் (LKG / 25% ஒதுக்கீடு. சேர்க்கை நடைமுறைகள் RTE Act. 2009 மறும் தமிழ்நாடு RTE விதிகள், 2011 அடிப்படையில் நடைபெறும்.

2. சேர்க்கை முறை

அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் சேர்க்கை தற்போது குழந்தைகள் நுழைவு நிலை வகுப்பில் கல்வி பயிலும் அதே மேற்கொள்ளப்படும். இந்த கல்வியாண்டில் மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே சேர்க்கப்பட்ட தகுதியான மாணவர்களை RTE ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்வதற்காக 10 நாள் கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

2. முன்னுரிமை பிரிவுகள்

ஆதரவற்றோர்
எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர்
மாற்றுப் பாலினத்தவர்
தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள்
மாற்றுத்திறனாளிகள்

ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் அதிகமானால், குலுக்கல் நடைமுறை (Random Selection) பின்பற்றப்படும்.

4. வசூலித்த கட்டணத்தை திருப்பிச் செலுத்துதல்

RTE தகுதியுடைய மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்தால், 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

5. கண்காணிப்பு மற்றும் புகார் தீர்வு

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழுக்கள் மூலம் கண்காணிப்பு. புகார்களுக்காக பிரத்தியேகமான உதவி எண் மற்றும் மின்னஞ்சல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6. கல்வி சமத்துவம் மற்றும் அணுகலை உறுதி செய்தல்

தமிழ்நாடு அரசு. ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கிங், இச்சேர்க்கை நடைமுறையை தெளிவான, சமத்துவமான மற்றும் குழந்தை மையப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஏற்கனவே அட்மிஷன் முடிந்துவிட்டது என்பதால், முன்னதாக சேர்ந்த மாணவர்கள் தகுதியுடையவர்களாக இருப்பின் அவர்கள் தலைமை ஆசிரியர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். புதிய மாணவர்கள் [email protected] என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+