சித்ரா மார்பில் காயம், விஐபி மகன்.. டேட்டிங் "வீடியோ" .. அடங்காமல் கிளம்பும் மர்ம மரணத்தின் புரளிகள்
சித்ரா மரணம் தொடர்பாக பல்வேறு புரளிகள் கிளம்பி வருகின்றன
சென்னை: சித்ராவின் மரண சம்பவத்தில் கிளம்பி வரும் பீதிகள், சந்தேகங்கள், புரளிகள், வதந்திகள் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை! சித்ரா மரணம் தொடர்பாக பல சந்தேகங்களை அவரது ரசிகர்கள் எழுப்பி வந்தாலும், சித்ராவின் தோழிகள் நித்தம் ஒரு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.. மற்றொரு பக்கம் அதற்கு மறுப்புகள் வெளியாகி வருகின்றன.. அவைகளின் தொகுப்புதான் இது!
சித்ரா - ஹேமந்த் இடையே நேரடியாக சம்பந்தம் இருப்பதும், அளவுக்கு அதிகமான டார்ச்சரை தந்து வந்ததும்தான் தற்கொலைக்கு தூண்டியது என்பது போலீஸ் தரப்பின் தகவல்.
இது சம்பந்தமாக ஹேமந்த் தற்போது புழலில் இருந்தாலும், அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் இதுகுறித்த மொத்த உண்மை தன்மையும் தெரியவரும்.

புகார்
எனினும், சித்ராவுடன் தொடர்புபடுத்தி வரும் செய்திகள் குறைந்தபாடில்லை.. ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி வெளியாகிறது.. விஜய் டிவி காம்பியர் ரக்ஷன் மீது ஒரு புகாரை கிளப்பி விட்டனர்.. ரிசார்ட் ஒன்றில் சித்ராவை ரக்ஷன் டேட்டிங் அழைத்து சென்றதாகவும், அங்கு வீடியோ எடுத்து வைத்து கொண்டு சித்ராவை மிரட்டி வந்ததாகவும் செய்திகள் கசிந்தன... மற்ற தகவல்களைவிட இதுதான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.. ரக்ஷனா இப்படி செய்தார்? என்ற அதிர்ச்சி கிளம்பியது.

விளக்கம்
ஆனால், இதற்கு ரக்ஷனே ஒரு விளக்கமும் தந்துவிட்டார்.."சித்ராவை நான் வீடியோ எடுத்தேனா? யார் சொன்னது? நானே கம்மி சம்பளம் வாங்கிட்டு இருக்கிறவன்.. நான் எப்படி இதையெல்லாம் செய்ய முடியும்.. நான் சித்ராவுக்கு நல்ல நண்பன்.. சித்ரா மரணத்துக்கு நானும்தான் போயிருந்தேன்.. அவரை மிரட்டுபவன் எப்படி சாவுக்கு போக முடியும்? அன்னைக்குகூட ஹேமந்த் பற்றிதான் நாங்கள் பேசி கொண்டிருந்தோம்" என்று விளக்கம் தந்துள்ளார்.

விஐபி மகன்
இதற்கிடையே, சித்ராவுக்கு ஒருசில அரசியல்வாதிகள் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினார்கள், நெருக்கடி தந்தார்கள் என்று செய்திகள் கசிந்தன.. அதேபோல, சித்ரா மீது ஹேமந்தின் நண்பர் ஒருவருக்கு ஈர்ப்பு இருந்தது என்கிறார்கள்.. அவர் ஒரு அரசியல்வாதியின் மகன் என்றும் சொல்கிறார்கள்.

மார்பில் காயம்
சித்ராவின் நண்பரும் நடிகருமான அசிம் இன்னொரு கேள்வியை கேட்கிறார், சித்ரா கன்னத்தில், தாடையில் காயங்கள் இருந்தது.. அது அவராகவே கீறி கொண்டார் என்றார்கள்.. ஆனால், அவர் நெஞ்சிலும் காயங்கள் உள்ளதே.. அது எப்படி வந்தது?" என்று ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். 3 நாளைக்கு முன்பு, சித்ராவின் தாய்மாமாவும் இதையேதான் சொல்லி இருந்தார். இப்படி ஒவ்வொரு தரப்பில் இருந்தும், மரணம் சம்பந்தமான கேள்விகள், சந்தேகங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில், சித்ராவின் மாமனாரும் ஒரு விஷயத்தை கிளப்பிவிட்டுள்ளார்.

ஹேமந்த்
நேற்று முன்தினம் மறுபடியும், செய்தியாளர்களிடம் பேசியபோது, "சித்ரா மரணத்துக்கு ஹேமந்த் மட்டும்தான் என்று சொல்லிவிட முடியாது.. சித்ராவுக்கு ஏற்கனவே பண நெருக்கடி இருந்தது.. வீட்டு கடன் இருந்தது.. அதுவாக கூட இருக்கலாம்.. ஹேமந்த்தால் மட்டுமே இறந்திருக்க முடியாது.. நாங்களும் வரதட்சணை கொடுமை அவரை செய்யவில்லை.. தற்கொலை வரை முடிவு செய்திருக்கிறார் என்றால், அதற்கு வேறு காரணமாகத்தான் இருக்கும்" என்று சொல்லி வழக்கின் போக்கையே மாற்றும்படி பேசியிருந்தார்.

ஆடியோ
தன்னை ஹேமந்த் கொடுமைப்படுத்துவதாகவும், புண்படும்படி பேசுவதாகவும் மாமனாரிடம் சித்ரா பேசிய கடைசி ஆடியோ சிக்கியும், அவர் இதுபோன்று சொல்லியதுதான் குழப்பத்தை தந்துள்ளது.. அப்படியானால், சித்ரா மரணத்துக்கு உண்மையிலேயே யார்தான் காரணம்? என்ன தான் நடந்தது? நித்தம் கிளம்பி கொண்டிருக்கும் வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது யார்?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications