ஊரக நூலகங்களிலும் மோசடி? திமுக ஆட்சியில் 19 கோடி நிதி ஒதுக்கீடு! அமைச்சர் ராஜ்மோகனுக்கு பறந்த புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் அமைக்கப்பட்ட பெரியார் அலுவலகத்திற்கு வாங்கப்பட்ட நூல்களில் மிகப்பெரிய முறைகேடு நடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் நூலகங்களில் முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த நிலையில் திமுக ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊரக நூலகங்களுக்கு 19 கோடி நிதி வழங்கப்பட்ட நிலையில் அதிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக பல பதிப்பக நிறுவனங்கள் அமைச்சர் ராஜ்மோகனுக்கு புகார் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக ஆட்சிக்காலத்தில் கோவையில் மிக பிரம்மாண்டமாக பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டது. சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த அறிவாலயம் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்த அறிவுலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

Library Scam tn govt

இதற்கிடையே ஒரு மிகப்பெரும் முறைகேட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார் எழுத்தாளரான பெருமாள் முருகன். பெரியார் அறிவுலகத்தில் ஆய்வு செய்தபோது போலி எழுத்தாளர்கள் போலி பதிப்பகங்கள் பெயர்களில் மூலம் உருவாக்கப்பட்ட ஏராளமான புத்தகங்கள் வாங்கப்பட்டு அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக கூறியிருந்தார்.

நூலக முறைகேடு

அது மட்டும் இல்லாமல் அகல் விளக்கு, பீனிக்ஸ் ஆகிய இரு பதிப்பகங்களும் ஆயிரக்கணக்கான போலியான புத்தகங்களை அச்சிட்டு விற்று உள்ளதும் தெரிய வந்தது. தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் திமுகவும் தவெகவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நூலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் சுமார் 70,000 போலி நூல்கள் வாங்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மற்றொரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றனர் பதிப்பாகத்தினர் அதாவது 2022 - 2023 திமுக ஆட்சிக்காலத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக 3808 ஊரக நூலகங்களை புதுப்பிக்க 84.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கிராம நூலகங்கள்

அதிலும் ஊழல் நடைபெற்று இருப்பதாக பல்வேறு பதிப்பக நிறுவனங்கள் பள்ளிக்கல்வித்துறை ராஜ்மோகனுக்கு புகார் அனுப்பியுள்ளனர். அதாவது தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக 3808 நூலகங்களை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர 84 கோடியே 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

3800 நூலகங்கள்

இந்த நிதி மூலம் கிராமங்களில் செயல்படாமல் உள்ள நூலகங்களை பராமரித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக 2021 - 2022 ஆம் ஆண்டில் 4,100 நூலகங்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டமாக 3800 நூலகங்கள் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. கட்டிட பராமரிப்பு பணிகள், புதிய கழிப்பறை வசதிகள் அமைத்தல், பர்னிச்சர் உள்ளிட்ட பொருள்கள் வாங்குவதற்கு என 84 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

மிகப்பெரிய ஊழல்

பராமரிப்பு பணிகளுக்கு 55 கோடியும், பர்னிச்சர் வாங்க 9 கோடியும், புதிய புத்தகங்கள் வாங்க 19 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது இதிலும் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது நூல்கள் வாங்கப்பட்டதுக்கு 19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இவற்றிலும் போலி புத்தகங்கள் வாங்கப்பட்டிருக்கலாம் என சில நூலகங்கள் பராமரிக்கப்படாமலேயே இருப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமைச்சர் ராஜ்மோகன்

இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என சில பதிப்பகத்தினர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு புகார் அனுப்பியுள்ளார்களாம். இதை அடுத்து இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என களத்தில் இறங்கியுள்ளது அரசு. இதிலும் மிகப் பெரிய ஊழல் வெளிச்சத்திற்கு வரலாம் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+