காலாவதியான ஊரக உள்ளாட்சிகளின் பதவி காலம்! வெளியான அதிரடி அறிவிப்பு! சிறப்பு அதிகாரிகள் நியமனம்!
சென்னை: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டு, தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 9,624 கிராம ஊராட்சிகள், 314 ஊராட்சி ஒன்றியங்கள், 28 மாவட்ட ஊராட்சிகளுக்கு சிறப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர்த்து, உள்ளாட்சி அமைப்புகளின் கீழும் மக்கள் பிரதிநிதிகள் செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கிறது.

மாநகராட்சி மேயர், துணை மேயர், வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள் என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இவை தவிர்த்து ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்:
ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், வார்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வார்டு வரையறை பிரச்சினை, எல்லை தீர்மானம் உள்ளிட்ட காரணமாக ஒன்பது மாவட்டங்களில் தாமதமாக அதாவது 21 மாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்பட்டது. 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிலையில், மற்ற ஒன்பது மாவட்டங்களுக்கு 2021ஆம் ஆண்டு நடைபெற்றது.
பதவிக் காலம் நிறைவு:
இந்த நிலையில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற தலைவர், வார்டு கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டவர்களின் பதவிக்காலம் ஜனவரி 5ஆம் தேதியான நேற்றுடன் நிறைவடைந்தது. வழக்கமாக பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தி முடிக்கப்படவில்லை.
உள்ளாட்சி தேர்தல் ரத்து:
தற்போது வரை தேர்தல் நடக்காத நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் தேர்தல் நடத்தப்படாமலேயே போகலாம் என கூறப்படுகிறது. தற்போது சில மாவட்டங்களில் கிராமங்களை நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை ஒட்டுமொத்தமாக 2026க்கு பிறகு நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.
சிறப்பு அதிகாரிகள் நியமனம்:
தற்போதைய சூழலில் ஊரக உள்ளாட்சி அமைப்பில் உள்ள ஏறக்குறைய 92 ஆயிரம் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. அதே நேரத்தில் 2019ஆம் ஆண்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் இடைவெளி விட்டு நடத்தப்பட்டது. அவர்களின் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் சில ஆண்டுகள் உள்ளது. இதன் காரணமாக ஒரே மாதிரியான தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வெளியான அறிவிப்பு:
இதனையடுத்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் செயல்பட்டது போல ஊரக உள்ளாட்சி அமைப்புகளை கலைத்துவிட்டு தனி அதிகாரிகளை நியமனம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக இன்று தொடங்கும் தமிழ்நாடு சட்டசபையில் மசோதா தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டு, தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 9,624 கிராம ஊராட்சிகள், 314 ஊராட்சி ஒன்றியங்கள், 28 மாவட்ட ஊராட்சிகளுக்கு தனி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications