கண்ணாடி மாதிரி நெளிந்த உருவம்.. தடுமாறிய தாம்பரம்! கொஞ்சம் லேசுல விட்டாலும்.. ரொம்ப டேஞ்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் லாவகமாக பாம்பை பிடித்து சென்றிருக்கிறார்.

தாம்பரம் புது பெருங்களத்தூர் பகுதியில், பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிட்டதாக அக்கம் பக்கத்தினர் பாம்பு பிடி வீரர்களுக்கு போன் செய்திருக்கிறார்கள். மலைப்பாம்பு குட்டி போல இருக்கிறது என்றும், விஷமற்ற பாம்பு போல தெரிவதாகவும் கூறியிருக்கிறார்கள். ஆனால், பாம்புபிடி வீரர்கள் வந்த பின்னர்தான், இது கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் என்று தெரிய வந்திருக்கிறது. பின்னர் அவர்கள் பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Russells Viper

இந்தியாவில் பாம்புகள்

இந்தியாவை பொறுத்தவரை 4 வகை பாம்புகள்தான் ரொம்ப டேஞ்சர். அதில் ஒன்றுதான் இந்த கண்ணாடி விரியன் பாம்பு. நாடு முழுவதும் ஏற்படும் பாம்புக்கடி மரணங்களில் 43% இந்த கண்ணாடி விரியன் பாம்புகள் கடிப்பதால்தான் ஏற்படுகிறது.

மற்ற பாம்புகளை போல இல்லாமல்.. கண்ணாடி விரியன் பாம்புகள் வித்தியாசமானவையாக இருக்கும். பார்க்கும் பலரும் இதை குட்டி மலைப்பாம்பு என்று நினைத்துதான் பக்கத்தில் போவார்கள். மலைபாம்புக்கும், கண்ணாடி விரியனுக்கும் பெரிய வித்தியாசம் தெரியாது. பாம்புகளுடன் பழக்கப்பட்டவர்களுக்குதான் வித்தியாசத்தை சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும்.

ஆள் பார்க்க டம்மி பீசு மாதிரித்தான் இருக்கும். உருளையாக.. சோம்பேறி மாதிரி தெரியும். மனிதர்கள் அருகில் சென்றால், தனது உடலை உரசி குக்கர் விசில் போல சத்தம் எழுப்பும். அதையும் மீறி பக்கத்தில் போனால், அதன் உடல் நீளத்தை விட, 2 மடங்கு நீளத்திற்கு தாவி கடிக்கும். 2 அடி நீளம்தான் பாம்பு இருக்கிறது எனில், 4 அடி வரை தாவி கடிக்கும்.

இந்த பாம்பின் விஷம் 40-70 மி.கி அளவுக்கு நமது உடலில் போனால் மரணம் நிச்சயம். ஆனால், இந்த பாம்புக்கு அளவு எல்லாம் தெரியாது.. அதுபாட்டுக்கு இஷ்டத்திற்கு விஷத்தை இறக்கும். பாம்புகளின் விஷத்தை 2 வகையாக பிரிக்கலாம்.

1. நியூரோடாக்சிக்
2. சைட்டோடாக்சிக்

கண்ணாடி விரியன் பாம்பின் விஷயம், சைட்டோடாக்சிக் வகையை சேர்ந்தது. விஷம் ரத்த குழாய்களை சிதைக்கும். எனவே கடிபட்டவரின் உள் உறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்படும். அதேபோல ரத்தம் உறைதலையும் இது தடுத்துவிடும். இதனால் காது, மூக்கு, வாய், பாம்பு கடித்த இடம், இன்னும் எங்கெல்லாம் உடலில் ஓடைகள் இருக்கிறதோ அங்கிருந்தெல்லாம் ரத்தம் வெளியே வந்துக்கொண்டே இருக்கும்.

இதன் விஷம் சிறுநீரகத்தைதான் முதலில் தாக்கும். எனவே, கண்ணாடி விரியன் கடித்த சில மணி நேரங்களிலேயே சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். நல்ல பாம்பு கடித்தால் கூட இப்படியெல்லாம் நடக்காது. அதன் விஷம் உயிரை கொல்லும் என்றாலும்.. கடிபட்டவர் இவ்வளவு நரக வேதனையை அனுபவிக்க மாட்டார். கண்ணாடி விரியன் கடித்தால் வாழும் ஒவ்வொரு நொடியும் நரகத்த நேரில் பார்ப்பார்கள். உடனே விஷ முறிவு மருந்து கொடுக்கப்படவில்லை எனில், அவர் உடல் உறுப்பு அழுகுவதை அவரே நேரில் பார்ப்பார்.

எனவே பாம்புகளை கண்டால் உடனே, வனத்துறையினருக்கு அல்லது பாம்பு பிடிவீரர்களுக்கு தகவல் தெரிவிக்கவும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்பு கடிக்கு விஷ முறிவு மருந்துகள் இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+