எங்கே தாக்குறாங்க பாருங்க.. அடுத்து நீங்கதான்! நேட்டோவிற்கு உக்ரைன் வார்னிங்.. ரஷ்யா அதிரடி மூவ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் வேகத்தை துரிதப்படுத்தி இருக்கும் நிலையில் நேட்டோ நாடுகளுக்கு உக்ரைன் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. மரியாபோல் நகரத்தில் ரஷ்யா இன்று கடுமையான தாக்குதல்களை நடத்தியது.

அதேபோல் கீவ், கார்கிவ் நகரங்களிலும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல்களை நடத்தியது. இதனால் உக்ரைனில் பெரும்பாலான நகரங்கள் ரஷ்யா வசம் செல்லும் சூழ்நிலை நிலவி வருகிறது.

உக்ரைன்

உக்ரைன்

இந்த நிலையில்தான் போரில் இதுவரை மேற்கு உக்ரைன் பகுதிகளை ரஷ்யா தாக்காமல் இருந்தது. ஏனென்றால் இதன் எல்லை பகுதியில் போலந்து உள்ளது. போலந்து என்பது நேட்டோ நாடு. உக்ரைனில் ஏதாவது தாக்குதல் நடத்த போய் அது போலந்து மேல் விழுந்தால் நேட்டோ படைகள் சண்டைக்கு வந்துவிடும். இதனால் நேட்டோ படைகளை பகைக்க வேண்டாம் என்பதால் மேற்கு உக்ரைன் பகுதிகளை தாக்காமல் கிழக்கு உக்ரைனில் மட்டும் ரஷ்யா கவனம் செலுத்தியது.

ரஷ்யா

ரஷ்யா

இதனால்தான் இந்தியா கூட மேற்கு உக்ரைனில் இருக்கும் லெவிவ் நகரத்திற்கு தனது தூதரகத்தை மாற்றியது. அங்கு இதுவரை தாக்குதல்கள் நடக்கவில்லை. ஆனால் இன்று லெவிவ் நகரத்தில் இருக்கும் யாவோரிவ் பகுதியில் திடீரென ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 35 பேர் பலியானார்கள். இந்த பகுதி போலாந்துக்கு அருகில் இருக்கும் எல்லையோர உக்ரைன் நகரம் ஆகும்.

வேகம்

வேகம்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் வேகத்தை துரிதப்படுத்தி இருக்கும் நிலையில் நேட்டோ நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளார். அதில் போலந்து எல்லை வரை ரஷ்ய படைகள் தாக்க தொடங்கிவிட்டன. அடுத்து போலந்தில் கூட ரஷ்யா தாக்கலாம். அது நேட்டோ நாடு. இப்போதே ரஷ்யா போலந்து எல்லையில் தாக்குகிறது. அடுத்து நேட்டோதான்.

போலந்து

போலந்து

இப்போதே வான்வெளியை உக்ரைனில் மூட வேண்டும். அப்போதுதான் ரஷ்யாவின் தாக்குதல் தடுக்கப்படும். இல்லையென்றால் அடுத்த இலக்கு ரஷ்யாவிற்கு போலந்தாகவே இருக்கும் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். முன்னதாக உக்ரைனில் வான் பகுதியை தடை செய்ய வேண்டும் என்று அதிபர் செலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார். ஆனால் அப்படி செய்தால் அது ரஷ்யாவுடனான நேரடி போருக்கு வழி வகுக்கும் என்பதால் ரஷ்யா அந்த முடிவை எடுக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+