கை வைக்க கூடாத இடத்தில் வச்சிட்டீங்க! டாலரே அழிந்து போயிடும்! பாய்ந்து வந்த ரஷ்யா! மாட்டிய அமெரிக்கா
சென்னை: பிரிக்ஸ் நாடுகள் மீது கை வைத்தால்.. பிரிக்ஸ் நாணயம் மீது கை வைத்தால் மொத்தமாக டாலர் என்ற நாணயம் அழிந்து போய்விடும் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது போஸ்டில், பிரிக்ஸ் குழு தனியாக நாணயம் ஒன்றை உருவாக்க பார்த்ததை அமெரிக்கா வேடிக்கை பார்த்த காலம் போய்விட்டது. பிரிக்ஸ் நாடுகள் புதிதாக நாணயம் எதையும் உருவாக்க கூடாது. இல்லையென்றால் ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தை பயன்படுத்த கூடாது.

அமெரிக்க டாலரை மட்டுமே இவர்கள் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு 100% கூடுதல் வரி விதிக்கப்படும். அமெரிக்காவில் அவர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் முடிவை கைவிட்டுவிடலாம். வேறு யாரவது ஏமாளி கிடைத்தால் அவர்களிடம் அவர்கள் போய் வியாபாரம் செய்யட்டும். பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வியாபாரத்தில் டாலரை தவிர வேறு எதையும் பயன்படுத்த கூடாது. டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உங்களுக்கு உள்ள உறவையும் துண்டித்துக்கொள்ளுங்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளது.
பிரிக்ஸ் நாணயம்; பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வருடா வருடம் நடப்பது வழக்கம்.
கடந்த ஆண்டு கூட்டத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகளை சேர்த்துக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அர்ஜென்டினா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை இந்த கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ள உள்ளது.
பிரிக்ஸ் நாடுகள் சேர்ந்து பிரிக்ஸ் கரன்சியை உருவாக்கும் திட்டத்தில் உள்ளது. பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு இடையே இந்த நாணயத்தை மட்டுமே பயன்படுத்தும். இது அமெரிக்க டாலரின் வீழ்ச்சியாக பார்க்கப்படும்.
இதனால் உலக அரசியலே மாறும். எண்ணெய் பொருட்கள் டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் கரன்சியில் வாங்கப்படும். முக்கியமாக சீனா, ரஷ்யாவிற்கு எழுச்சியை இது கொடுக்கும் என்பதால் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா அதிர்ச்சியில் உறைந்து உள்ளன. இதைத்தான் டிரம்ப் எதிர்த்து உள்ளார்.
பிரிக்ஸ் நாடுகள்தான் ஏற்கனவே உலகின் பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக ரஷ்யா, சீனா, இந்தியா ஆகியவைதான் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் டாலரை கைவிட்டால் அது அமெரிக்காவிற்கு பெரிய அடியாக இருக்கும். இதைத்தான் தற்போது அமெரிக்கா கடுமையாக எதிர்த்து உள்ளது.
புடின் எச்சரிக்கை: பிரிக்ஸ் நாடுகள் மீது கை வைத்தால்.. பிரிக்ஸ் நாணயம் மீது கை வைத்தால் மொத்தமாக டாலர் என்ற நாணயம் அழிந்து போய்விடும் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் 100% வரி விதித்தால் டாலரை நாங்கள் மொத்தமாக புறக்கணிப்போம். மொத்த உலக பொருளாதாரத்தில் நாங்கள்தான் அதிகம் உள்ளோம். அப்படி இருக்க டாலர் மொத்தமாக உலகில் இருந்தே.. வர்த்தகத்தில் இருந்தே நீக்கப்படும் நிலை ஏற்படும். உலக அளவில் எங்கள் வர்த்தகத்தில் டாலர் இல்லாத நிலையை கொண்டு வருவோம்.. டாலரை நாங்கள் மொத்தமாக புறக்கணிப்போம், என்று புடின் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications