விஜய்க்கு இது தேவையா, எஸ்.ஏ.சந்திரசேகர் சார்?
சென்னை: தலைமைப் பண்புக்கு நடிகர் விஜய் கொஞ்சம் கொஞ்சமாக தயாராகி வருவதாக அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் டிவி சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில், தீபாவளிக்கு வெளியாக உள்ள சர்கார் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் அரசியல் பஞ்ச் டயலாக்குகளை பேசினார். முதல்வர் ஆசையையும் மறைமுகமாக வெளிப்படுத்தினார்.
விஜய் சமீபகாலத்து படங்களில் அரசியல் வசனம் பேசுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் பொது மேடையில் முதல் முறையாக அப்போதுதான் அரசியல் பேசினார்.

விஜய் அரசியல்
இதையடுத்து விஜய் அரசியலுக்கு வர உள்ளதாக தகவல்கள் றெக்கை கட்டி பறக்கின்றன. விஜய்யின் அரசியல் ஆசை பின்புலத்தில் அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திரசேகரின் முந்தைய பேட்டிகளும் கூட இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில்தான் இருந்தன.

மாற்றம்
இந்நிலையில் புதிய தலைமுறை டிவி சேனலுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த சிறப்பு பேட்டியில், கொஞ்சம் கொஞ்சமாக தலைமைப் பண்புக்கு விஜய் தயாராகி வருகிறார் என நம்புகிறேன். விஜயின் வாழ்க்கை முறை, பேச்சு, நடவடிக்கையை கவனித்து வருவதில் இருந்து எனக்கு தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் முடிவு
நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வது அவரது சினிமா, தற்போது சினிமா மூலம் விஜய் நல்ல விஷயங்களை கூறி வருவதால் நடிகராக எனக்கு பிடிக்கிறது என்றும் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஆனால் விஜய் அரசியலில் என்ன முடிவு எடுப்பார் என்பது குறித்து கணிக்கத்தான் முடியுமே தவிர அதை விஜய் தான் முடிவு எடுப்பார் என்றும் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

விஜய் வளர்ச்சி
நடிகர் விஜய் இப்போதுள்ள தலைமுறையில் உச்சநட்சத்திரமாக இருந்து வருகிறார். ரஜினிகாந்த்துக்கு பிறகு அதிகப்படியான வசூலை விஜய் படங்கள்தான் வாரி குவிக்கின்றன. ரஜினிகாந்த்துக்கு கூட கடந்த சில படங்களாக ஓப்பனிங் நல்லா இருக்கிறதே தவிர, பினிஷிங் சரியில்லையப்பா என்ற வடிவேலு டயலாக் மாதிரிதான் 1 வாரத்திற்கு பிறகான வசூல் குறைகிறது. ஆனால் விஜய்க்கு அப்படியில்லை. இந்த ஒரு சூழலில், அவரை அரசியலுக்கு இறங்கிவிட சந்திரசேகர் துடிப்பது சரிதானா என்ற கேள்வியை விஜய் ரசிகர்களே சமூக வலைத்தளங்களில் கேட்பதை பார்க்க முடிகிறது.

அரசியல் சார்பு தேவையா
விஜய் அரசியல் கட்சி பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, குடும்பத்தோடு கொண்டாடப்படும் ஒரு நடிகராக வளர்ந்துள்ளார். ஆனால், அரசியல் சார்பு கொள்கையை எடுக்கும்போது அதை எல்லா ரசிகர்களும் ரசிப்பார்களா என்பது கேள்விக்குறி. பட வாய்ப்புகள் குறைந்து, ஓய்வு பெறும் வயதிலுள்ள முன்னாள் உச்ச நட்சத்திரங்களுக்கு வேண்டுமானால் அரசியல் ஆசை வரலாம். அதில் ஒரு லாஜிக் உள்ளது. விஜய்க்கு இப்போது அது தேவையில்லை என்கிறார்கள் பெரும்பாலான ரசிகர்கள். சந்திரசேகர் இனியாவது இதுபோன்ற முயற்சிகளை கைவிடுவாரா, அல்லது விஜய் அரசியலுக்கு வருவாரா என்பதை வரும் நாட்கள் தெரிவிக்கும்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி












Click it and Unblock the Notifications