பின்னணி பாடகி ஜானகியின் உடல் நிலை குறித்து வதந்தி.. எஸ்பி பாலசுப்பிரமணியம் கடும் கண்டனம்
சென்னை: பழம்பெரும் பின்னணி பாடகி ஜானகி அவர்களின் உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதற்கு பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்திய திரையுலகில் பழம்பெரும் பாடகி ஜானகி. வயது 80. இவர் 17 மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார்.2016ம் ஆண்டுன் திரை உலகைவிட்டு விலகிய அவர் ஹைதராபாத்தில் உள்ள தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஜானகியின் உடல் நிலை குறித்து வதந்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரவியது. இந்நிலையில் மீண்டும் அவரது உடல் நிலை குறித்து வதந்தி பரவி உள்ளது. இந்த வதந்தி சமூக வலைதளத்தில் பரபரப்பை உண்டாக்கிய நிலையில் ஜானகியின் மக்ன் முரளி கிருஷ்ணா மறுப்பு தெரிவித்தார். ஜானகியும் தனது உடல் நிலை குறிந்த வதந்தி குறித்து வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் ஜானகி அவர்களின் உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதற்கு பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இன்று காலை ஜானகி அம்மா அவர்களின் உடல் நிலைகுறித்து கேட்டு 20க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன. . முட்டாள் தனமான வதந்தியை சிலர் பரப்பி உள்ளார்கள்.. நான் ஜானகி அம்மாவுடன் பேசினேன். அவர் மிக மிக நல்ல உடல்நலத்துடன் உள்ளார். அவர் மீது அன்பு உள்ள கொண்ட கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த செய்தி பேரிடியாக இருக்கும். .தயவு செய்து சமூக வலைதளத்தை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துங்கள். இந்த மாதிரி கேவலமான காரியங்களை கேலியாக செய்ய வேண்டாம். ஜானகி அம்மா நல்ல உடல்நலத்துடன் பாதுகாப்பாக இருக்கிறார். அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்வார்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications