இளைய தளபதி இந்த பேட்டிக்கு என்ன காரணம்?.. உதயநிதியை விமர்சித்த பாஜக நிர்வாகி எஸ் ஆர் சேகர்
சென்னை: இளைய தளபதி ஏன் இப்படி இறங்கி வந்துட்டீங்க என சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதியை பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என இளையராஜா ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதியது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவியை கொடுக்க போகிறார்கள். அதற்காகதான் இவ்வாறு மோடியை புகழ்ந்து பேசியுள்ளார் என இளையராஜாவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

இளையராஜா
திமுக கூட்டணி கட்சிகள் இளையராஜாவை விமர்சித்திருந்த நிலையில் அவர் குறித்து திமுக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து சேப்பாக்கம் தொகுதிக்கு வந்த உதயநிதி செய்தியாளர்களை சந்தித்த போது அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்
பிரதமர் மோடி குறித்து இளையராஜா கூறியது அவருடைய சொந்த கருத்து.

முதல்வர் ஸ்டாலின்
இதில் யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். யாரையும் அநாகரிகமான முறையில் விமர்சிக்கக் கூடாது. இளையராஜாவை மட்டும் அல்ல யாரை அநாகரிகமாக விமர்சித்தாலும் அது தவறுதான் என உதயநிதி கூறியிருந்தார்.

எஸ் ஆர் சேகர் ட்வீட்
இதுகுறித்து எஸ் ஆர் சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், இளைய தளபதி ஏன் இப்டி இறங்கி வந்துட்டீங்க! சிந்து சமவெளி நாகரீகம் படிச்சிருக்கோம். உங்கள் நாகரீகத்தை தான் தினசரி பாக்குறோமே. இந்த பேட்டிக்கு காரணம் அடி ரொம்ப பலமோ? உங்களுக்கு எதிர்வினை தவிர எந்த languageல் சொன்னாலும் புரியாதே அதனால் தான் என விமர்சனம் செய்துள்ளார்.

புத்தகத்திற்கு முன்னுரை
புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதிய நிலையில் அதுகுறித்த சர்ச்சை முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி குறித்து தான் கூறிய கருத்துகளை திரும்ப பெற மாட்டேன் என்றும் பதவிக்காக நான் யாரையும் புகழவில்லை என்றும் இளையராஜா தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications