திரிசங்கு சொர்க்கம்.. வெறுப்பு அரசியல்.. சாத்தான் வேதம் ஓதுவதா? திருமாவளவனுக்கு பாஜக சரமாரி கேள்வி

வெறுப்பு அரசியல் செய்து வருகிறார் திருமாவளவன் என பாஜகவின் எஸ்.ஆர். சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கும் திருமாவளவன் அதிமுக கூட்டணியை விமர்சிப்பதா? என பாஜகவின் எஸ்.ஆர். சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக இருந்த சி.டி.ஆர். நிர்மல் குமார் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். அவர் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

தான் சட்டரீதியாக போராடும் ஒரு திமுக அமைச்சருடன் அண்ணாமலை பேரம் பேசியுள்ளார் என்றும் அண்ணாமலையால் தமிழக பாஜகவுக்கு மட்டுமில்லை, தமிழ்நாட்டுக்கே கேடு என கடுமையாக விமர்சித்திருந்தார் நிர்மல் குமார்.

 பாஜகவிலிருந்து விலகிய நிர்மல்

பாஜகவிலிருந்து விலகிய நிர்மல்

பாஜகவில் இருந்து விலகிய நிர்மலை தங்கள் கட்சியில் இணைத்ததற்காக அமர் பிரசாத் ரெட்டி, கூட்டணியில் உள்ள அதிமுக இதை செய்திருக்கக் கூடாது. தமிழகத்தின் எதிர்காலம் பாஜகதான், அண்ணாமலை தலைமையின் கீழ் பாஜக ஆட்சி அமைக்கும் என்றார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை சுட்டிக் காட்டிய அமர்பிரசாத் ரெட்டி, கோட்டையை கைப்பற்றுவதை மறந்துவிட வேண்டியதுதான் என அதிமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார் அமர்பிரசாத் ரெட்டி.

அதிமுகவில் கொந்தளிப்பு

அதிமுகவில் கொந்தளிப்பு

இவர் பேசிய பேச்சு அதிமுகவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக- பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்றும் கருதப்படுகிறது. பாஜக தலைமையில்தான் கூட்டணி என்றும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்றும் இருதரப்பிலிருந்தும் பதிலடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில், பாஜகவுடனான கூட்டணி அதிமுகவுக்கு நல்லதல்ல.

எந்த பலனும் இல்லை

எந்த பலனும் இல்லை

அதிமுகவுக்கு பாஜகவால் எந்த பலனும் இல்லை. அதிமுக முதுகில் பாஜக சவாரி செய்து கொண்டிருக்கிறது. இனியும் பாஜகவுடன் அதிமுக கூட்டணியை தொடர்வது நல்லதல்ல. எனவே பாஜகவை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும். கூட்டணியில் தொடர்ந்தால் பாஜக சொல்வதைத்தான் அதிமுக கேட்க வேண்டிய நிலை ஏற்படும் என திருமாவளவன் அறிவுரை வழங்கியிருந்தார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செம்மலை கூறுகையில் யாருடன் கூட்டணி வைப்பது என்பதை எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என தெரிவித்திருந்தார்.

எஸ். ஆர். சேகர் பேச்சு

எஸ். ஆர். சேகர் பேச்சு

பாஜக குறித்து திருமாவளவன் பேச்சு குறித்து அக்கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில் திமுக கூட்டணியில் திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கும் திருமாவளவன் அதிமுக கூட்டணியை விமர்சிக்கலாமா? சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. அதிமுக எத்தனை பெரிய கட்சி எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்துள்ளார், அவருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு இவரது கட்சி உயர்ந்துவிட்டதா

4 எம்எல்ஏக்கள்

4 எம்எல்ஏக்கள்

இவரது கட்சிதான் திமுகவின் முதுகில் சவாரி செய்துக் கொண்டிருக்கிறது. இவரது கட்சிக்கு இருப்பதே ஒரே ஒரு எம்பி, எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. இதில் எங்கள் கட்சியை விமர்சிக்கிறாரா. எங்கள் கட்சிக்கு தமிழகத்தில் 4 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது. மத்தியிலும் எங்கள் ஆட்சிதான். எங்கள் கட்சி யாருடைய முதுகிலும் சவாரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. திருமாவளவன் செய்வது வெறுப்பு அரசியல் என கடுமையாக விமர்சித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+