DMK Files ஐ விடுங்க.. அண்ணாமலையின் சொத்துக் கணக்குகள் விரைவில் வெளியீடு.. எஸ்.வி.சேகர் பரபரப்பு
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அவரது நண்பர்கள், உறவினர்களின் சொத்து கணக்கை சேகரித்து வருவதாகவும் அந்த பணிகள் முடிந்ததும் அவற்றை வெளியிடுவதாகவும் பாஜக மூத்த தலைவர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக அரசியல் கட்சிகள் மாறி மாறி வெவ்வேறு கட்சிகளை குற்றம்சாட்டிக் கொள்ளும். ஆனால் தமிழக பாஜகவில்தான் சொந்த கட்சியினரையே விமர்சிக்கும் சூழல் எழுந்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து எஸ்.வி.சேகர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதுகுறித்து கடந்த சில தினங்களாக பத்திரிகை பேட்டிகளில் விமர்சித்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக டிவிட்டர் ஸ்பேஸில் எஸ்.வி.சேகர் அண்ணாமலைக்கு எதிரான பாஜக நிர்வாகிகளுடன் பேசி வருகிறார்.
அதில் அவர் கூறுகையில் தமிழகத்தில் ஒவ்வொரு ஜாதிக்கும் ஏதாவது ஒரு பெயரில் கட்சி உள்ளது. அந்த வகையில் பிராமணர்களுக்காக தமிழகத்தில் விரைவில் புதிய கட்சி தொடங்கப்படும். இது குறித்து அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிராமணர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய கட்சி தொடங்கப்படுகிறது.
சட்டசபையிலும் ஒரு பிராமணர் கூட எம்எல்ஏவாக இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தி பலத்தை காட்ட திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலிலும் பிராமணர் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும். தமிழக பாஜக தலைவர் நியமனத்திலேயே விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை.
பாஜக பைலா படி கட்சி தலைவராக ஒருவர் 10 ஆண்டுகள் அக்கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களைதான் பாஜக தலைமை பதவியில் அமர வைக்கும். ஆனால் அண்ணாமலை நியமனத்தில் விதிமீறல் உள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தலில் பிரச்சாரத்தின் போது மேகதாது அணையை கட்ட மாட்டேன் என அண்ணாமலை பேசியிருக்கிறார். இப்படி பல்வேறு விஷயங்களை எஸ்.வி.சேகர் தெரிவித்திருந்தார்.

அது போல் அவர் ஒன் இந்தியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: திமுகவின் ஊழல் பட்டியல் என்ற ஒன்றை அண்ணாமலை வெளியிட்டிருந்தார். ஆனால் அவை எல்லாம் தேர்தல் ஆணையத்திலேயே உள்ளது. நாங்கள் எதில் ஊழல் செய்தோம் என்ற பட்டியலை வெளியிடுமாறு திமுகவினர் கேள்வி எழுப்பினார்கள்.
இந்த நிலையில் அண்ணாமலையின் சொத்து கணக்குகள், அவருடைய உறவினர்கள், நண்பர்களின் சொத்துக் கணக்குகளை சேகரிக்க சொல்லியுள்ளேன். அந்த விவரங்கள் கிடைத்தால் அவற்றை வெளியிடுவேன். திமுக பைல்ஸ் போல் புகைப்படங்களுடன் சொத்துக் கணக்குகள் வெளியிடப்படும். அது எப்போது என சொல்ல முடியாது. இப்போதுதான் அதற்கான பணிகளில் இறங்கியுள்ளேன். விவரங்கள் கிடைத்ததும் விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications