“விஜய்க்கு பேச தெரியணும் முதலில்.. சீமான் இடத்தை பிடிக்க முயற்சிக்கிறார்”.. எஸ்.வி.சேகர் பேட்டி!
சென்னை: "சீமான் இடத்தைப் பிடிப்பதற்கு விஜய் முயற்சி செய்கிறார் என வைத்துக் கொள்ளலாம்." என ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி சேகர்.
தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை அருகே நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக, பாஜக மற்றும் அதிமுகவை சாடிப் பேசி இருந்தார். இந்நிலையில், நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி சேகர், விஜய் கட்சியின் மாநாடு தொடர்பாக ஒன் இந்தியாவுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்துள்ளார்.

எஸ்.வி.சேகர் பேசுகையில், "விஜய் கேரவனை விட்டு இப்போதுதன் இறங்கி இருக்கிறார். உலகம் இன்னும் பெரியது. ராக்கெட்டில் செல்பவர்கள் நிலாவில் கால் வைத்து, அடுத்த காலை வைக்கலாமா கூடாதா? என சோதித்துப் பார்ப்பார்கள். அந்தமாதிரி எதுவும் தெரியாமலே அரசியலில் இறங்கிவிட்டார். புதுச்சேரியில் 4 தெருவுக்கு எம்.எல்.ஏவாக ஜெயித்த புஸ்ஸி ஆனந்த் பேச்சைக் கேட்டு குதித்துவிட்டார்.
ஸ்டாலினை அங்கிள் என்பதால் விஜய் ஒன்றும் அரை டிராயர் போட்ட பையன் ஆகிவிடப்போவதில்லை. இந்த காமெடி பேச்செல்லாம் சினிமாவோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என காமராஜர் காலத்திலேயே நிரூபிக்கப்பட்டது. அதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசியலை கேவலமாக்கும் முயற்சியில் தான் தவெக ஈடுபட்டு வருகிறது. சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை விஜய் அடுத்த மே மாதம் புரிந்துகொள்வார். சினிமா என்பது பொழுதுபோக்கு. நடிகன் தனக்குப் பிடித்ததை செய்வதால் ரசிகன் கொண்டாடுவான். நடிகனுக்கு பிடித்ததை எல்லாம் ரசிகன் செய்யமாட்டான். விஜய்க்கு முதலில் பேசத் தெரிய வேண்டும்.
விஜய் என்ன கொள்கை வைத்துள்ளார்? மக்களுக்காக என்ன செய்வார்? சினிமா டிக்கெட்டை 10 ரூபாய் ஆக்குவேன் என இவரால் சொல்ல முடியுமா? சீமான் இடத்தைப் பிடிப்பதற்கு விஜய் முயற்சி செய்கிறார் என வைத்துக் கொள்ளலாம். இந்த மாநாட்டில் சுண்டல் விற்க வந்தவர் வழக்கமாக 500 ரூபாய்க்கு விற்பவர் இன்று 1000 ரூபாய்க்கு விற்றிருந்தால் அவருக்கு இந்த மாநாடு வெற்றி. விஜய்க்கு வெற்றியா என்பது எல்லாம் மே மாதம் தான் தெரியும்." எனக் கூறியுள்ளார் எஸ்.வி.சேகர்.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications