உங்க அரசியல் பாதையையும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.. எஸ்.வி.சேகரை வாரும் நெட்டிசன்கள்
ராஜ கண்ணப்பனை தாக்கி எஸ்வி சேகர் ட்வீட் போட்டுள்ளார்.
சென்னை: "சேகர் சார்.. கொஞ்சம் உங்க அரசியல் பாதையையும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்" என்று ட்விட்டரில் எஸ்வி சேகரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
சில தினங்களாகவே அதிமுக கூட்டணியில் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு சீட் தராததுடன் ஒட்டுமொத்த யாதவர்களின் எதிர்ப்பையும் அதிமுக சம்பாதித்து வருகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த கண்ணப்பன், நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இது குறித்து பாஜக ஆதரவாளரான எஸ் வி சேகர் ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார்.
ராஜ கண்ணப்பன் அவர்களின் கொள்கைப் பாதை
— S.VE.SHEKHER (@SVESHEKHER) March 19, 2019
1991-96- அதிமுக அமைச்சர்
2000 - மக்கள் தமிழ் தேசம்
2006 - கட்சி கலைப்பு
2006 - திமுக
2009- திமுக எம்.எல்.ஏ வாக அதிமுக தாவல்
2016- தீபா அணி
2017- ஒபிஸ் அணி
2017- ஒருங்கிணைந்த அதிமுக
2019- மீண்டும் திமுக
2021.-⁉️⁉️
அதில், "ராஜ கண்ணப்பன் அவர்களின் கொள்கைப் பாதை
1991-96- அதிமுக அமைச்சர்
2000 - மக்கள் தமிழ் தேசம்
2006 - கட்சி கலைப்பு
2006 - திமுக
2009- திமுக எம்.எல்.ஏ வாக அதிமுக தாவல்
2016- தீபா அணி
2017- ஒபிஸ் அணி
2017- ஒருங்கிணைந்த அதிமுக
2019- மீண்டும் திமுக
2021.-⁉️⁉️" என்று பதிவிட்டுள்ளார்.
அப்படியே உங்களுடைய கொள்கை பாதையையும் போடுங்க ராசா.
— சிவா (@andrewshiva007) March 19, 2019
எந்த தைரியத்தில் எஸ்வி சேகர் இப்படி ஒரு ட்வீட் போட்டார் என்று தெரியவில்லை. லிஸ்ட் போட்டு கேள்வி கேட்ட எஸ்வி சேகரை அதே லிஸ்ட் போட்டு நெட்டிசன்கள் போட்டு தாக்கி வருகிறார்கள். அதில், "எஸ்வி சேகரின் கடந்த கால அரசியல் பாதை என்று பதிவிட்டு
காங்கிரஸ்
|
அதிமுக
|
காங்கிரஸ்
|
(தற்காலிகமாக)பாஜக" என்றும், "சார் நீங்களும் அதிமுக "திமுக "காங்கிரஸ் என பயணித்து இறுதியில் பாஜக வில் இணைந்தீர்கள் என்றும் லிஸ்ட் போட்டு விளக்கமாக சொல்லி உள்ளனர். மேலும் "அண்ணன் வரலாறு இதைவிட பெரிசு" என்று குறிப்பிட்டு நிறைய மீம்ஸ்களை தட்டி விட்டுள்ளார்கள்.
எஸ்.வி.சேகர் அவர்களின் கொள்கைப் பாதை
— ramanan (@saikailash11) March 19, 2019
1.காங்கிரஸ்
2006 - அதிமுக
2009- அதிமுகவில் இருந்து துரத்தப்பட்டார்
2017- பாஜக
2021.-⁉️⁉️ pic.twitter.com/jclNupflXX
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications