கிஸ்ஸை வைத்து என்னா மாதிரி பேசுறாருய்யா இந்த சுரேஷ்.. யாரைக் கலாய்க்கிறார் பாருங்க!
சென்னை: முத்தத்தை வைத்து என்ன மாதிரி பேசுறாரு பாருங்க இந்த சுரேஷ், அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். எப்படி வரம் கொடுத்தவர் தலையிலேயே கை வைக்கிறார் பாருங்கள்.
பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு விளையாட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கடந்த 3 சீசன்களிலும் ஒவ்வொரு வில்லிகள் இருந்தனர். முதல் சீசனில் காயத்ரி ரகுராம், 2ஆவது சீசனில் ஐஸ்வர்யா தத்தா, 3ஆவது சீசனில் ஷாத்ஷாத் நம்ம வனிதா அக்கா ஆகியோர் நெகட்டிவ் கேரக்டர்களாக இருந்தனர்.
பிக்பாஸ் சீசன் 4 தொடங்கியுள்ள நிலையில் ஷனம் ஷெட்டி எப்போதும் சண்டை போடுபவராகவே இருந்து வருகிறார். அது போல் சுரேஷுக்கும் அனிதா சம்பத்திற்கும் லடாய் முற்றியுள்ளது.

நிகழ்ச்சி
இருவரும் பரஸ்பரம் பேசிக் கொள்வதே இல்லை. அது போல் நேற்றைய நிகழ்ச்சியில் சுரேஷுக்கும் பாடகர் முருகனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அது போல் ரியோவுக்கும் சுரேஷுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே ஒட்டுமொத்தமாக பார்த்தால் சுரேஷ்தான் வில்லன் போன்று காணப்படுகிறார்.

சுரேஷ்
வில்லத்தனம் இருக்கும் அதே சுரேஷிடம் நகைச்சுவை உணர்வும் அதிகமாகவே இருக்கிறது. இதுகுறித்து எஸ்வி சேகர் தனது ட்விட்டரில் கூறுகையில் , சுரேஷ் சக்ரவர்த்திக்கு இருக்கும் SENSE OF HUMOUR அசாத்தியம். இவர் யாரை கலாய்க்கிறார் கண்டு பிடிங்க என்று கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ரேகா
அதில் சுரேஷ் பிக்பாஸ் வீட்டில் ரேகாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதாவது கமல்ஹாசன் கதாநாயகிகளுடன் முத்தமிடும் காட்சிகளில் நடிக்கும் போது மற்ற ஹீரோயின்களை விட உங்களுக்கு (ரேகா) பெருமை அதிகம். என்னன்னு சொல்லுங்க என ரேகாவிடம் கேட்கிறார்.

ரேகா
அதற்கு ரேகாவோ எனக்கு தெரியவில்லையே என்கிறார். உங்களுக்கு கிஸ் செய்துவிட்டு ஹீரோ தற்கொலை செய்து கொண்டதுதான் என்கிறார். அதற்கு அனைவரும் சிரிக்கிறார்கள், ரேகாவுக்கு புரியவில்லை. என்னாது என கேட்கிறார்.

புன்னகை மன்னன்
அங்கிருப்பவர்கள் புன்னகை மன்னன் படம் குறித்து அவர் கூறுகிறார் என்கிறார்கள். அதற்கு ரேகாவோ அவர் தற்கொலை செய்து கொள்கிறார், ஆனால் அவர் சாகவில்லையே என்று ரேகா பதிலளிக்கிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு கமல்ஹாசனையே கலாய்த்துள்ளார் சுரேஷ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications