பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ரஜினிகாந்த் நிச்சயம் முதல்வராவார்.. எஸ் வி சேகர் பலே பேச்சு
Recommended Video
சென்னை: பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ரஜினி நிச்சயம் முதல்வராவார் என எஸ் வி சேகர் பேசியுள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னையில் அவரது ரசிகர்கள் முன்னிலையில் தெரிவித்தார். ஆனால் இரண்டாண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் அவர் இன்னும் கட்சியையே தொடங்கவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் நகைப்புக்குரியதாகிவிட்டது.
இந்த நிலையில் அவரோ வரும் 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போதுதான் கட்சியை தொடங்குவேன் என கூறி வருகிறார். அப்போது 234 தொகுதிகளில் தனித்து போட்டி என்றும் அவரது இலக்கு 234 என்றும் கூறி வருகிறார்.

ரசிகர்கள் கவலை
அவருக்கு பின்னால் அறிவித்த கமல்ஹாசன் கட்சியை தொடங்கி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றுவிட்டார். ஆனால் ரஜினி இன்னும் கட்சியையே ஆரம்பிக்கவில்லை என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

சிவாஜி கணேசன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்த அடையாறுக்கு வந்தார் எஸ் வி சேகர். அப்போது சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

முதல்வர் வேட்பாளர்
அப்போது அவர் கூறுகையில் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலில் வரும் தேர்தலில் பங்கெடுப்பார். அவர் தமிழகத்தின் முதல்வராவார். யார் நிறைய தொகுதிகளில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே முதல்வராவர். அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

தேர்தலில்
அப்போது நிச்சயம் அவர் வெற்றி பெற்று முதல்வராவார். பாஜகவின் தயவின்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. எனவே தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் ரஜினி வெற்றி பெறுவார் என்றார் எஸ் வி சேகர்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications