டிஸ்சார்ஜான ஸ்டாலின்.. மருத்துவமனையில் இருந்து முதல்வர் காரை வீட்டுக்கு ஓட்டி சென்றது யாரு பாருங்க?
சென்னை: முதல்வர் முக ஸ்டாலின் 7 நாள் சிகிச்சைக்கு பிறகு இன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஸ்டாலினை காரில் வைத்து அதனை வீட்டுக்கு ஓட்டி சென்றவர், பின் இருக்கையில் அமர்ந்தவர்கள் கவனம் பெற்றனர்.
முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த 21ம் தேதி திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. அன்றைய தினம் காலையில் வழக்கம்போல் ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் தலைசுற்றல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு மறுநாள் தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
ஆஞ்சியோ செய்யப்பட்டது. ஸ்டாலினின் இதயத்துடிப்பில் மாறுபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதயத் துடிப்பில் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக முதல்வர் ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து ஸ்டாலின் நலமானார்.
இந்நிலையில் தான் இன்று மாலையில் முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் ஆனார். அவரது உடல்நல பிரச்சனை பூரண குணமடைந்தது. இதையடுத்து அவர் அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். மருத்துவமனைக்கு சென்று அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர். அதன்பிறகு மருத்துவமனையில் இருந்து ஸ்டாலின் வீடு வரை கட்சியினர் திரண்டு நின்று அவருக்கு ஆதரவாக கோஷமிட்டு வரவேற்றனர்.
இந்த வேளையில் ஸ்டாலின் பயணித்த காரில் இருந்தவர்கள் கவனம் பெற்றனர். அவரது காரில் வழக்கமான டிரைவர் இல்லை. அதற்கு பதிலாக காரை மருமகன் சபரீசன் ஓட்டி சென்றார். காரின் முன் இருக்கையில் ஸ்டாலின் அமர்ந்து தொண்டர்களை நோக்கி கையசைத்தார். பின் இருக்கையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி, மகன் இன்பநிதி, மகள் தன்மயா ஆகியோர் இருந்தனர். இது கவனம் பெற்றது.
முன்னதாக ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து அப்போலா சார்பில் மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‛‛முதல்வர் ஸ்டாலின் மருத்துவ சிகிச்சை முடித்து நலமுடன் இருக்கிறார். மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் முதல்வர், 3 நாட்களுக்கு பின் வழக்கமான பணிகளை தொடரலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications