உதயநிதிக்கு சினிமாவில் நடிப்பதை விட முக்கிய பொறுப்பு இருக்கு! இனி நடிக்கமாட்டார்! சபரீசன் பளிச்!
சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு சினிமாவில் நடிப்பதை விட வேறு சில முக்கிய பொறுப்புகள் இருப்பதாக கூறியிருக்கிறார் அவரது மச்சானும், முதலமைச்சரின் மருமகனுமான சபரீசன்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படமான மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சபரீசன் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். பொதுவாக செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்க்கக் கூடிய சபரீசன் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்து பேசவும் செய்திருக்கிறார்.
இதன் மூலம் எதிர்காலத்தில் இவரது நேரடி அரசியல் வருகையும் உறுதி செய்வது போல் தெரிகிறது. இதனிடையே உதயநிதி ஸ்டாலின் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் இன்னும் சொல்லப்போனால் நடிக்க வேண்டாம் எனவும் தனது மைத்துனரை சபரீசன் கேட்டுக்கொண்டார்.

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்றும் அரசியலில் இன்னும் பல சிகரங்களை அவர் எட்டுவார் எனவும் சபரீசன் மனமார வாழ்த்தவும் செய்தார். நடிப்பதை கைவிட முடிவெடுத்த போது உதயநிதி ஸ்டாலின் வருத்தப்பட்டார் என்றும் ஆனால் இப்போது தனக்கிருக்கும் மக்கள் பணிகளால் அந்த வருத்தம் அவருக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் முழுக்க முழுக்க அரசியல்வாதியாக் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை தான் சபரீசன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், எப்போதுமே பிரஸ்மீட் என்றால் அதை தவிர்க்கக் கூடிய சபரீசன் நேற்றைய தினம் மறுப்பு ஏதும் சொல்லாமல் பொறுமையாக பதில் அளித்துவிட்டு சென்றது தான்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படமான மாமன்னன் திரைப்படத்தை தாம் இன்னும் பார்க்கவில்லை என்றும் படப்பிடிப்புக்கு மட்டும் சென்றிருப்பதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications