பிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் "போர்வாள்" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு வாழ்த்து சொல்லி ஊரெல்லாம் போஸ்டர்கள் அடித்து அமர்க்களப்படுத்தி விட்டனர் தொண்டர்கள்!

முக ஸ்டாலின் ஒரு பக்கம் உதயநிதியை களமிறக்கி உள்ளார் என்றால் மறு பக்கம் மாப்பிள்ளை சபரீசனையும் ஏற்கனவே களமிறக்கி விட்டார்.

தலைவர் பதவி ஏற்ற ஓரிரு மாதங்களில் சோனியா காந்தியை சந்திக்க சென்றபோது, சபரீசனையும் அழைத்து கொண்டு போனார் ஸ்டாலின்.

மனசாட்சி

மனசாட்சி

கருணாநிதிக்கு மனசாட்சியாக அவரது மருமகன் முரசொலி மாறன் இருந்தார். அதனால்தான் அவரை டெல்லிக்கு அனுப்பி அழகு பார்த்தார் கருணாநிதி. இப்போது ஸ்டாலினுக்கும் அவரது மருமகன் சபரீசன்தான் மனசாட்சியாக இருந்து வருகிறார். அதனால் கருணாநிதியை போலவே இந்த விஷயத்திலும் ஸ்டாலின் நடந்து கொள்வதாகவே தெரிகிறது.

கூட்டணி

கூட்டணி

டெல்லி சமாச்சாரங்களை கவனித்து வருவது சபரீசன் என்று ஏற்கனவே கூறப்பட்டது. அதேபோல, நடந்து முடிந்த தேர்தலின்போது, கூட்டணி உள்ளிட்ட சில பல விஷயங்களை பேசி முடித்தது சபரீசன்தான். இந்த விஷயம் திமுகவுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் அமைந்தது.

மிக முக்கிய நபர்

மிக முக்கிய நபர்

மேலும் கட்சியின் மிக முக்கியமான விஷயங்களையும் சபரீசன்தான் கவனித்து வருகிறார். ஓஎம்ஜி நிறுவனமும் சபரீசன் மூலம்தான் நடந்து வருகிறது. இதனால் சபரீசனை தவிர்த்துவிட்டு திமுகவை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

போஸ்டர்கள்

போஸ்டர்கள்

இந்நிலையில், இன்று சபரீசனுக்கு பிறந்த நாள். இதற்காக உடன்பிறப்புகள் வாழ்த்து வரிகளை அள்ளி தெளித்து போஸ்டர்கள் ஒட்டி உள்ளார்கள். போன வருடம்கூட இப்படி ஒரு கொண்டாட்டம் இல்லை, ஆனால் இந்த வருடம் சபரீசனுக்கு நிறைய பேர் நேரிலும் வாழ்த்து சொல்லி உள்ளனர். எப்படியும் சபரீசனுக்கு ஒரு முக்கிய பதவி கன்பார்ம்ட் என்கிறது அறிவாலய வட்டாரம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+