என்னது ஹிந்தி தேசிய மொழியா? ஸ்டாலின், டிஆர் பாலுவிடம் சீறிய நிதிஷ் குமார்.. கோபமான ஜக்கி வாசுதேவ்
சென்னை: "இந்தியா" கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்த நிலையில் நிதிஷ் குமார் ஹிந்தியில் பேசினார். இதனை மொழிபெயர்க்க கோரியபோது முதல்வர் முக ஸ்டாலின், திமுக எம்பி ஆகியோரை ஹிந்தி கற்க கூறி அவர் சீறியுள்ளார். இந்நிலையில் தான் நிதிஷ் குமாருக்கு எதிராக இஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கோபத்தை கொப்பளித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதாதளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன.

இந்நிலையில் தான் ‛இந்தியா’ கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. 28 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். சோனியா காந்தி, நிதிஷ் குமார், முதல்வர் ஸ்டாலின் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தலைவர்கள் உரையாடினர். அப்போது ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் ஹிந்தியில் உரையாற்றினார். அப்போது டிஆர் பாலு தனக்கு எதிராக அமர்ந்திருந்த நிதிஷ்குமாரின் கட்சியை சேர்ந்த மனோஜ் ஷாவிடம் சைகை காட்டி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் எனக்கூறினார்.
சமோசா ஏன் தரல? ‛இந்தியா’ கூட்டணி மீட்டிங்கில் அதிருப்தி! காங். சண்டைக்கு போன எம்பி! யார் தெரியுமா?
இதையடுத்து மனோஜ் ஷா, நிதிஷ் குமாரிடம் கூறியபோது அவர் கடும் கோபம் அடைந்தார். ‛‛நாம் ஹிந்துஸ்தானில் வாழ்கிறோம். ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி. திமுக தலைவர்கள் ஹிந்தி மொழி கற்க வேண்டும்’’ எனக்கூறியுள்ளார். இதை எதிர்பார்க்க ஸ்டாலின், டிஆர் பாலு உள்ளிட்டவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது அங்கு பரபரப்பை உருவாக்கி சலசலப்பை ஏற்படுத்தியது. நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இந்நிலையில் தான் நிதிஷ் குமாரின் இந்த பேச்சுக்கு இஷா மையத்தின் நிறுவனரான சத்குரு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛மதிப்பிற்குரிய நிதிஷ் குமார், ஹிந்துஸ்தான் என்றால் இமயமலைக்கும், இந்து சாகரத்துக்கும் நடுவில் உள்ள நிலமா அல்லது இந்தி பேசாத இந்துக்கள் வாழும் இடமா.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்போது மக்கள்தொகையில் பெரிய வேறுபாடுகள் இருந்தாலும் நாட்டிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் ஒரே அந்தஸ்துக்காக இது மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மொழி, இலக்கியம், கலாசாரத்தை பின்பற்றும் மாநிலங்கள் இருப்பதால் இதுபோன்ற வாதங்களை தவிர்க்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications