திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி
சென்னை: ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் காவி உடை அணிந்தவாறு திருவள்ளுவர் படம் இடம்பெற்றிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவிக்க முதல்வர் தயங்குவது ஏன் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
திருவள்ளுவருக்கு காவி நிறத்தில் உடை அணிவித்து, அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்று இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இதற்கு திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இப்படி இருக்கையில்தான் இன்று ஆளுநர் மாளிகையில் 'வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள்' என்கிற பெயரில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த படத்தில், வள்ளுவர் காவி நிற உடையில் இடம்பெற்றிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,
"எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க.
தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது. ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?
தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம். இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க.
வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள். தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது.
சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்?" என தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications