100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் அதிரடி உயர்வு.. வெளியான குட்நியூஸ்.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நாளைக்கான ஊதியம் ரூ.17 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் அனைவருக்கும் வேலை வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் ஆண்டுக்கு 100 நாட்கள் வரை வேலை செய்ய முடியும்.

கிராமப்புறத்தில் வசிக்கும் வயதானவர்களை மனதில் வைத்து இந்த திட்டம் என்பது உருவாக்கப்பட்டது. வயதான காலத்திலும் அவர்களுக்கு ஊதியம் கிடைக்க இந்த திட்டம் உதவி செய்கிறது.
குளம், ஏரி ஆழப்படுத்துதல், கால்வாய் புனரமைப்பு, ரோடு அகலப்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகளில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தில் வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும். சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை என்பது தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுவோருக்கு குட்நியூஸை வழங்கி உள்ளது மத்திய அரசு. அதாவது 2025-26ம் ஆண்டுக்கான 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. அதாவது தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நாளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் ரூ.319 ஆக உள்ளது. தற்போது ரூ.17 வரை ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒரு நாளைக்கான ஊதியம் என்பது ரூ. 319ல் இருந்து ரூ.336 ஆக உயர உள்ளது. இந்த புதிய ஊதிய உயர்வு என்பது ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய கிராம மேம்பாட்டு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு என்பது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் வேறுபட்டு வருகிறது. குறைந்தபட்சம் 2.33 சதவீதம் முதல் 7.48 சதவீதம் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் குறைந்தபட்சம் ரூ.7 முதல் ரூ.26 வரை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை எடுத்து கொண்டால் 5.33 சதவீதம் ஊதிய உயர்வாக ரூ.17 வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆந்திரா, அருணாச்சல பிரேதசம், அசாம், நாகலாந்து மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தலா 7 வரை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக ஹரியானா மாநிலத்தில் உயர்த்தப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் 100 நாள் வேலை திட்டம் சம்பளம் என்பது ரூ.400யை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications