அரசு ஊழியர்களுக்கு "டபுள்" குட்நியூஸ்.. DA + ஊதிய உயர்வு.. எகிற போகுது சம்பளம்.. அடேங்கப்பா இவ்வளவா?
சென்னை: இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 8 - வது ஊதிய குழு அமைக்கப்படும் என்று தகவல்கள் வந்தது. இது குறித்து மத்திய நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி அகவிலைப்படி மற்றும் ஊதியம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
அகவிலைப்படி: அந்தவகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் அகவிலைப்படி 4 சதவீதமாக உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்ல, அகவிலைப்படி 42 சதவீதமாக இருக்கும் நிலையில், அடுத்த வருடம் 2024 ஜனவரிக்கு பிறகு, அது 50 சதவீதத்தை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட ஊழலில், 8வது ஊதியக்குழு குறித்த இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. வழக்கமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழு அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு 7வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டு, அது 2016ல் அமலுக்கு வந்தது. அந்தவகையில், எட்டாவது ஊதிய குழு அமைக்கப்படுவது குறித்து ஆலோசனைகள் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது.
பரிந்துரை: தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் பலன்களை ஊழியர்கள் பெற்றுவருகிறார்கள்... ஆனாலும், தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதைவிட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் புகார் சொல்லி வருகிறார்கள்.. எனவேதான், மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழுவை அமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஊதியக்குழு: 8-வது ஊதியக்குழு அமைக்கப்பட்டுவிட்டால், புதிய ஆணையம் பல்வேறு மாற்றங்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் வரும் 2024ம் ஆண்டில் 8-வது ஊதியக் குழுவை அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மாநிலங்களவையில் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அப்போது, 8-வது ஊதியக் குழு அமைப்பது தொடர்பான எந்த முன்மொழிவும் இப்போது தங்களிடம் இல்லை.. பொதுவாக, ஊதியக்குழு 10 வருடங்களுக்கு ஒரு முறை கொண்டு வரப்படுகிறது..
செயல்திறன்: அதனால், இப்போது 10 வருடங்களுக்கு முன்பு இதில் எந்த வகையிலும் பரிசீலிக்கும் திட்டமும் அரசுக்கு கிடையாது.. மேலும், ஒருவரின் செயல்திறனை பார்த்து, அதன் அடிப்படையிலான அமைப்பையே கொண்டு வர உள்ளோம் என்று அரசு ஏற்கனவே தெரிவித்திருக்கிறது.
performance அதாவது செயல் திறன் அடிப்படையிலான அமைப்பில், ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்கு ஏற்ப மதிப்பீடுகள் கிடைக்கும்.. அதைவைத்து, சம்பளமும் உயர்த்தப்படும்.. அந்தவகையில், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், சலுகைகளை மற்றும் ஓய்வூதியத்தின் கட்டமைப்பை மாற்ற புதிய கமிஷன் அமைக்க தேவையில்லை" என்று விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications