ஹேப்பியோ ஹேப்பி.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரேடியாக உயருது சம்பளம்.. குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்வு?
சென்னை: இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 8 - வது ஊதிய குழு அமைக்கப்படும் என்று தகவல்கள் வரும்நிலையில், குறைந்தபட்ச ஓய்வூதியம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி அகவிலைப்படி மற்றும் ஊதியம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
அகவிலைப்படி: அந்தவகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் அகவிலைப்படி 4 சதவீதமாக உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்ல, அகவிலைப்படி 42 சதவீதமாக இருக்கும் நிலையில், அடுத்த வருடம் 2024 ஜனவரிக்கு பிறகு, அது 50 சதவீதத்தை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட ஊழலில், 8-வது ஊதியக்குழு அமைக்கப்பட்டுவிட்டால், புதிய ஆணையம் பல்வேறு மாற்றங்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் வரும் 2024ம் ஆண்டில் 8-வது ஊதியக் குழுவை அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அதுகுறித்து முக்கிய அறிவிப்பு கடந்த வாரம் வெளியாகி உள்ளது.
நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மாநிலங்களவையில் இதுகுறித்து கூறும்போது, "8-வது ஊதியக் குழு அமைப்பது தொடர்பான எந்த முன்மொழிவும் இப்போது தங்களிடம் இல்லை.. பொதுவாக, ஊதியக்குழு 10 வருடங்களுக்கு ஒரு முறை கொண்டு வரப்படுகிறது..
PERFORMANCE: அதனால், இப்போது 10 வருடங்களுக்கு முன்பு இதில் எந்த வகையிலும் பரிசீலிக்கும் திட்டமும் அரசுக்கு கிடையாது.. மேலும், ஒருவரின் செயல்திறனை பார்த்து, அதன் அடிப்படையிலான அமைப்பையே கொண்டு வர உள்ளோம் என்று அரசு ஏற்கனவே தெரிவித்திருக்கிறது. எனவே, performance அதாவது செயல் திறன் அடிப்படையிலான அமைப்பில், ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்கு ஏற்ப மதிப்பீடுகள் கிடைக்கும்.. அதைவைத்து, சம்பளமும் உயர்த்தப்படும்..
அந்தவகையில், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், சலுகைகளை மற்றும் ஓய்வூதியத்தின் கட்டமைப்பை மாற்ற புதிய கமிஷன் அமைக்க தேவையில்லை" என்று விளக்கமளித்திருந்தார்.
மத்திய அரசு ஊழியர்கள்: இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிப்பது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஒரு விளக்கத்தை தந்துள்ளார்.. அதாவது, மத்திய அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்று இறந்துவிட்ட பிறகு, அவர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த குறைந்தபட்ச ஓய்வூதியமானது, விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சமீபகாலமாகவே செய்திகள் பரவி வருகின்றன.. இது குறித்து மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

ஓய்வூதியம்: இதற்கு மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்து பேசும்போது, "மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்சமயம் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9000 வழங்கப்படுகிறது. அதனை உயர்த்த அரசு இன்னும் திட்டமிடவில்லை. மேலும் 44,81,245 ஓய்வூதியர்கள் இருக்கும்நிலையில், இதில் 20,93,462 பேர் குடும்ப ஓய்வூதியதாரர்கள்..
அவர்களுக்கு 2022-23 ஆம் நிதியாண்டில் 2,41,777 கோடி ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப அகவிலைப்படி அதிகரித்து விரைவில் வழங்கப்படும்" என்றார்...
ஹேப்பி: மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிப்பது குறித்து மத்திய அமைச்சர் தந்துள்ள இந்த விளக்கமானது, பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications