Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்சூரன்ஸ்.. பசுமாட்டின் ஓனருக்கு ரூ.65,000 காப்பீடு.. திடீர்னு சேலம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு..

Subscribe to Oneindia Tamil

சென்னை: இறந்துபோன பசுமாடு குறித்த வழக்கு ஒன்றில், சேலம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.. என்ன நடந்தது சேலத்தில்?

விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் திடீரென நோயுற்றாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் இறந்துவிட்டாலோ அதனை ஈடு செய்யும் விதமாக காப்பீடு திட்டம் நடைமுறையில் உள்ளது.. ஆடு, மாடு, பன்றி, குதிரை மற்றும் நாய் போன்றவற்றிற்கு காப்பீடு உள்ளது. தேசியக் கால்நடை இயக்கம் சார்பில் நாடு முழுவதும் கால்நடைக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Salem Insurance Company Cow

தமிழ்நாடு: இந்த திட்டம் தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது... இதன் மூலம் கால்நடை வளர்ப்போர் தங்கள் ஆடு மற்றும் மாடுகளுக்குக் காப்பீடு செய்துகொள்ளலாம். ஆடுகளுக்கு ரூபாய் 5,000 வரையும், மாடுகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரையிலும் காப்பீடு செய்து கொள்ளலாம்.. காப்பீட்டுத் தொகையில் 2 சதவிகிதத் தொகைப் பிரீமியமாகச் செலுத்த வேண்டும்.

இதில், பட்டியல் இனத்தவருக்கு 70% தொகையையும், இதர வகுப்பினருக்கு 50 சதவீதப் பிரீமியத் தொகையையும் மாநில அரசே மானியமாக செலுத்தி விடுகிறது. கால்நடை வளர்ப்போர் மீதத்தொகையைக் கட்டினாலே போதும். எதிர்பாராதவிதமாகக் கால்நடைகள் இறந்துவிட்டால் காப்பீட்டு முதிர்வுத் தொகை முழுவதும் அப்படியே விவசாயி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.

கால்நடை வளர்ப்பு: ஆனால், இந்த திட்டம் குறித்த தகவல்கள் முழுமையாக தெரியாததால் பெரும்பாலான கால்நடை வளர்ப்பவர்கள், தங்கள் கால்நடைகளுக்குக் காப்பீடு செய்வதில்லை. இதற்காகவே, கால்நடைக் காப்பீட்டுத் திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் நம்முடைய தமிழகத்தில் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நோய் பாதிப்பால் இறந்த பசுவின் உரிமையாளருக்கு காப்பீடு வழங்காத நிறுவனத்துக்கு, வழக்கு ஒன்றில், சேலம் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றினை வழங்கியிருக்கிறது.

பசு மாடுகள்: சேலம் மாவட்டம், பொட்டனேரியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் சேலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "அரசின் கால்நடை காப்பீட்டு திட்டத்தின்கீழ், நானும், என் மகனும், தலா 5 பசு மாடுகளை காப்பீடு செய்திருந்தோம். 2022 டிசம்பர் 29 முதல், 2023 டிசம்பர் 28 வரை காப்பீடு காலம். நோயால், 2023 ஏப்ரல் 6ல் பசு மாடு ஒன்று உயிரிழந்தது. உடனே, பொட்டனேரி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலருக்கு தகவல் அளித்தேன்.

மறுநாள், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி முன், ஆவின் கால்நடை டாக்டரால், உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மாடு புதைக்கப்பட்டது.. காப்பீடு தொகை விரைவில் கிடைக்கும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

கடிதம்: ஆனால், நேரடியாகவும், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் வாயிலாகவும், பல முறை முயன்றும் காப்பீடு தொகை கிடைக்கவில்லை. காப்பீடு கோரிய விண்ணப்பத்தை நிராகரித்து, 2023 ஜூலை 13ல், காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு கடிதம் வந்தது.
எனவே, மாட்டின் இறுதிச்சடங்கு செலவு 10,000 ரூபாய்; காப்பீடு கோரி அலைந்த செலவு 1,000 ரூபாய், மன உளைச்சலுக்கு 5,000 ரூபாயுடன், 50,000 ரூபாய் காப்பீடு தொகையும் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.

10 மாடுகள்: இந்த மனுவானது, சேலம் நுகர்வோர் நீதிமன்ற தலைவர் கணேஷ்ராம், உறுப்பினர் ரவி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்தரப்பில் வழக்கறிஞர் எம்.நந்தகுமார் ஆஜரானார். அப்போது, 2 தரப்பு வாதங்களுக்கு பின்பு பிறப்பித்த உத்தரவில், "ஒரே குடும்பத்தில் மனுதாரரும், அவரது மகனும், 10 மாடுகளுக்கு காப்பீடு செய்துள்ளனர். ஒரே திட்டத்தில், 10 மாடுகளை காப்பீடு செய்துள்ளதால், மனுதாரருக்கு காப்பீடு தொகை மறுக்கப்படுகிறது என்று பதில் அளித்திருக்கிறார்கள்.

இது, காப்பீடு நிறுவன அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், மாடுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி எண்கள் வழங்கியிருக்கிறார்கள்.. மனுதாரர், அவரது மகன் 2 பேரின் வீட்டு முகவரியும் ஒன்று. இதுகுறித்து, அதிகாரிகளுக்கு நன்றாக தெரிந்தும்கூட, காப்பீடு தொகையை வழங்காமல் சேவை குறைபாடு புரிந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.

அதிரடி உத்தரவு: அதனால், 50,000 ரூபாய் காப்பீடு தொகை; சேவை குறைபாடுக்கு 8,000 ரூபாய்; மன உளைச்சலுக்கு 4,000 ரூபாய், வழக்கு செலவுக்கு 3,000 ரூபாயை, 2 மாதத்துக்குள் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்" என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+