சேலம் அரசு பஸ்களில் மாற்றம்.. மஞ்சள், சிவப்பு தவெக கலரில் நின்ற 25 பேருந்துகள்.. நெட்டிசன்கள் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் 25 புதிய அரசு பேருந்துகள் மஞ்சள்-சிவப்பு நிறத்தில் தயாராகி இருப்பது, தவெக கொடியின் நிறங்களை நினைவுபடுத்துவதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது... திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்ட நிலையில், இப்போது அரசு பேருந்துகளின் நிறமும் மாற்றப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பேருந்துகளின் நிறம், பராமரிப்பு, புதிய பேருந்துகளின் எண்ணிக்கை என பல்வேறு கேள்விகளை எழுப்பி நெட்டிசன்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்த பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. திமுக திட்டங்கள் தொடர்ந்தாலும் அவற்றின் பெயர்கள் மாற்றப்படுவதற்கு திமுகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்..

Salem Government Buses

சேலத்தில் அரசு போக்குவரத்து கழகம்

இந்த நிலையில், சேலத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் புதிய பஸ்கள் மஞ்சள்-சிவப்பு நிறத்தில் தயாராகி இருப்பது இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ஜான்சன்பேட்டை அரசு போக்குவரத்துப் பணிமனையில் 25 புதிய பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பேருந்துகளின் மேல் பகுதி மஞ்சள் நிறத்திலும், கீழ்பகுதி சிவப்பு நிறத்திலும் இருப்பதால், இந்த வண்ண அமைப்பு தவெக கொடியின் நிறங்களை நினைவுபடுத்துவதாக சோஷியல் மீடியாவில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த பஸ்கள் அனைத்தும், சேலம் மாவட்டத்தின் பல்வேறு புறநகர் பகுதிகளில் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பேருந்துகளில் "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்" என்ற பெயரும் முழுமையாக எழுதப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த நிறத் தேர்வு தவெகவை மனதில் வைத்து செய்யப்பட்டதாக அரசு தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை.

மஞ்சள் கலர் 25 அரசு பேருந்துகள்

அதேசமயம், மஞ்சள் கலர் அரசு பேருந்துகள் இப்போதுதான் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டவை என்று கூறிவிட முடியாது. ஏற்கனவே அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் இயக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்போது சர்ச்சைக்கு காரணமாக இருப்பது மஞ்சள் & சிவப்பு என்ற டபுள் கலர்தான்.. மொத்தம் 25 பஸ்களுக்கும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே அவற்றின் நிறம் அரசியல் விவாதத்துக்கு காரணமாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஆதரவு குரல்களும் எதிர்ப்புகளும் பதிவாகி வருகின்றன. சிலர், "கிளாம்பாக்கம் வளைவை விட இந்த சேலம் பஸ் கலர் ஒன்றும் மோசமில்லை" என்றும், "பிங்க் கலர் பஸ் யார் விட்டது, கிரீன் கலர் பஸ் அந்த ஆட்சி வந்ததும் மாற்றினார்கள்" என்றெல்லாம் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளனர். எனினும் எதிர்ப்பு தெரிவிக்கும் சலசலப்பு கருத்துகளே அதிகமாக காணப்படுகின்றன.

ஸ்கூல் பஸ் மாதிரி ஆக்கிட்டாங்க

"இப்போ ஸ்கூல் பஸ் மாதிரி ஆக்கிட்டாங்க.. இதனால் ஸ்கூல் பஸ்ஸுக்கே லுக் போச்சு" என்று ஒருவர் விமர்சித்துள்ளார். இன்னொருவரோ, "வெறும் 25 பஸ்ஸை வைத்துக்கொண்டு என்ன பயன்? 80 சதவீத பஸ்கள் காலாவதியாகிவிட்டன? மக்கள் நலத் திட்டங்களுக்கு அரசு கஜானாவில் பணம் இல்லை, ஆனால் விளம்பரம் செய்ய மட்டும் பணம் உள்ளதா?" என்று காட்டமாக கேட்டுள்ளார்.

அதேபோல், "எல்லா மாவட்டங்களுக்கும் ஏசி, வால்வோ பஸ்கள், நல்ல இருக்கை வசதிகள் வேண்டும். பேட்டரி பேருந்துகள் கொண்டு வரலாம். முறையான பராமரிப்பு மிக முக்கியம். தமிழ்நாட்டில் பஸ் புதிதாக வரும்போது மட்டுமே சுத்தமாக இருக்கிறது, அதன் பிறகு ஒட்டு, ஓட்டை என ஆகிவிடுகிறது. போக்குவரத்து நவீனமாக வேண்டும் என்றும் ஒருவர் நீண்ட கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதே தவறை இவங்களும் செய்றாங்களே

"கரண்ட் பில், வீட்டு வரி, தண்ணீர் பில் என எல்லாமே உயர்ந்துவிட்ட நிலையில், இதெல்லாம் தேவையா? ஏற்கனவே இருக்கும் பஸ்கள் போதாதா?, அதை முறையாக பராமரித்தாலே போதுமே? மற்ற கட்சிகள் செய்ததை மாற்றுவோம் என்று சொல்லிவிட்டு, மறுபடியும் அதே தவறைதான் இவர்களும் செய்கிறார்கள்" என்ற விமர்சனமும் பதிவாகியுள்ளது.

அனைத்துக்கும் மேலாக, இடைத்தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளின் கொடி தொடர்பாக தேர்தல் விதிகள் கடுமையாக பின்பற்றப்படும் நிலையில், இந்த பஸ்களின் நிறம் குறித்தும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

"இடைத்தேர்தல் நேரத்தில் இந்த பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுமா? என்றும் நெட்டிசன்கள் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

இதனால், சேலத்தில் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராத 25 புதிய அரசு பேருந்துகளின் மஞ்சள்-சிவப்பு நிறம், இப்போது அரசியல் ரீதியாகவும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+