சேலம் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: திமுக செல்வகணபதி வெற்றி.. 2ஆம் இடத்தில் அதிமுக
சென்னை: தமிழகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றான சேலம் லோக்சபா தொகுதியில் திமுகவின் செல்வகணபதி 5,66,085 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் விக்னேஷை விட 70357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணி பாமக வேட்பாளர் அண்ணாதுரை 1,27,139 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தை பிடித்தார்.
மாம்பழத்து நகரம் என்ற பெருமைக்கு உரியது சேலம். விவசாயம் நிறைந்த மாவட்டமான சேலத்தில் தொழிற்சாலைகளும் உள்ளன. சேலம் லோக்சபா தொகுதி கடந்த1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சேலம் லோக்சபா தொகுதியை பொறுத்தவரை சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, ஓமலூர், வீரபாண்டி, எடப்பாடி என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

சேலம் லோக்சபா தொகுதி: சேலம் லோக்சபா தொகுதியில் கடந்த கால தேர்தல் வரலாற்றை புரட்டி பார்க்கும் போது காங்கிரஸ் 6 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 4 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
2024 லோக்சபா தேர்தலில் திமுக, அதிமுக நேரடியாக மோதிக்கொள்ளும் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். பாஜக தலைமையிலான தேசிய ஜனனாயக கூட்டணியில் பாமக போட்டியில் உள்ளது. நாம் தமிழர் கட்சியும் கோதாவில் உள்ளது.
வேட்பாளர்கள் யார் யார்?: இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 16,48,911- ஆகும். ஆண்கள் 8,23,336, பெண்கள் 8,25,354, மூன்றாம் பாலினம் 221 வாக்குகள் உள்ளன. வாக்குப்பதிவு சதவிகிதத்தை பொறுத்தவரை 78.16 % வாக்குகள் பதிவாகின. வேட்பாளர்கள் விவரங்களை பார்த்தால் திமுகவில் செல்வ கணபதியும், அதிமுகவில் விக்னேஷும், பாமகவில் அண்ணாதுரையும், நாம் தமிழர் கட்சி சார்பாக மனோஜ்குமாரும் போட்டியிடுகிறார்கள்.
அதிமுக செல்வாக்கு மிக்க பகுதியாக உள்ள இந்த மாவட்டத்தில் திமுக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது. லோக்சபா தேர்தல் வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்ப்பட்டன. தொடர்ந்து இவிஎம் எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காலை 11 மணி நிலவரப்படி
திமுகவின் செல்வகணபதி 9289 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் விக்னேஷை விட 1245 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பாஜக கூட்டணி பாமக வேட்பாளர் அண்ணாதுரை 2805 வாக்குகள் பெற்றுள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE :
காலை 11 மணி நிலவரப்படி,
திமுக செல்வகணபதி - 9289
அதிமுக விக்னேஷ் - 8044
பாஜக கூட்டணி பாமக அண்ணாதுரை - 2805
நாம் தமிழர் கட்சி - மனோஜ்குமார் - 1194
வாக்கு எண்ணிக்கை முடிவில்:
திமுக செல்வகணபதி - 5,66,085
அதிமுக விக்னேஷ் - 4,95,728
பாஜக கூட்டணி பாமக அண்ணாதுரை - 1,27,139
நாம் தமிழர் கட்சி - மனோஜ்குமார் - 76,207
நோட்டா - 14,894 வாக்குகள் கிடைத்துள்ளன.
வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுகவின் செல்வகணபதி அதிமுகவின் விக்னேஷை விட 70357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
முந்தைய தேர்தல் முடிவுகள்: 1999 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட செல்வகணபதியும், 2004 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.வி.தங்கபாலுவும் வென்றுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் செம்மலையும், 2014 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவை சேர்ந்த பன்னீர்செல்வமும் வெற்றி பெற்றனர். 2019 ஆம் ஆண்டு தேர்தலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வென்றது. எஸ்.ஆர். பார்த்திபன் வெற்றி பெற்றார். இந்த முறை திமுக சார்பில் செல்வகணபதி நிறுத்தப்பட்டுள்ளார்.
2004 லோக்சபா தேர்தல் முடிவுகள்:
கேவி தங்கபாலு (காங்கிரஸ்) - 4,44,591
ராஜசேகரன் (அதிமுக) - 2,68,964
2009 லோக்சபா தேர்தல் முடிவுகள்:
செம்மலை (அதிமுக) - 3,80,460
கேவி தங்கபாலு (காங்கிரஸ்) - 3,33,969
மோகன் ராஜ் (தேமுதிக) - 1,20,325
2014 லோக்சபா தேர்தல் முடிவுகள்:
பன்னீர் செல்வம் (அதிமுக) - 5,56,546
உமாராணி (திமுக) - 2,88,936
எல்கே சதீஷ் (தேமுதிக) - 2,01,265
2019 லோக்சபா தேர்தல் முடிவுகள்:
எஸ் ஆர் பார்திபன் (திமுக) - 6,06,302
கேஆர எஸ் சரவணன் (அதிமுக) - 4,59,376
பிரபு மணிகண்டன் ( மக்கள் நீதி மய்யம்) - 58,662.












Click it and Unblock the Notifications