சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார் இந்த முரளீதரன்?.. பாஜவுக்குள் திடீர் சலசலப்பு.. சர்ச்சையைக் கிளப்பிய சேர்க்கை!

Google Oneindia Tamil News

Recommended Video

    சர்ச்சையைக் கிளப்பிய சேர்க்கை! | பாஜக-வில் சேர்ந்த முரளிதரனின் பிண்ணனி

    சென்னை: தமிழக பாஜகவில் சேர்ந்துள்ளார் சேலத்தைச் சேர்ந்த முரளீதரன். அவர் சேர்ந்ததை விட அவரை எப்படி கட்சியில் சேர்க்கலாம் என்ற சர்ச்சை பாஜகவுக்குள் வெடித்துள்ளதாம்.

    தமிழக பாஜகவை நோக்கி இப்போது பல்வேறு துறையினரும் பறந்து வர ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் சினிமாத்துறையைச் சேர்ந்த நமீதா, துணை நடிகை ஜெயலட்சுமி, நடிகர் ராதாரவி என பலரும் பாஜக பக்கம் போய் விட்டனர்.

    இந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இது அக்கட்சியின் மூத்த தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

    ஜெயக்குமார், டிஜிபி திரிபாதி பந்து வீச.. பேட்டை லாவகமாக சுழற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிஜெயக்குமார், டிஜிபி திரிபாதி பந்து வீச.. பேட்டை லாவகமாக சுழற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    முரளீதரன்

    முரளீதரன்

    சேலம் தாசநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் இந்த முரளீதரன். இவர் தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வத்தை தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து கட்சியில் இணைத்துக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களும் வினோஜ் செல்வத்தின் டிவிட்டரில் வெளியாகியுள்ளது.

    பாஜக இளைஞர் அணி

    பாஜக இளைஞர் அணி

    அந்த டிவீட்டில் திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த முரளீதரன் பாஜக இளைஞர் அணியில் சேர்ந்தார். இவரைப் போல மேலும் பல இளைஞர்களும் பாஜகவில் சேரவுள்ளனர் என்று போடப்பட்டுள்ளது. ஆனால் முரளீதரன் பின்னணி குறித்து புதுப் புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளன.

    குண்டாஸில் உள்ளே போனவர்

    குண்டாஸில் உள்ளே போனவர்

    இந்த முரளீதரன், ரவுடியாக வலம் வருபவர் எனக் கூறப்படுகிறது. இவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளனவாம். ஆள் கடத்தல், கொள்ளை, மிரட்டல் என பல வழக்குகள் உள்ளனவாம். இவர் குண்டர் சட்டத்தின் கீழும் கைதாகி சிறை சென்று திரும்பியவர் என்று சொல்கிறார்கள். இவர் முன்பு அதிமுகவில் இணைய முயன்றபோது இவரது பின்னணி குறித்து அறிந்த அதிமுக தலைமை இவரை சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டதாம்.

    மூத்த தலைவர்கள் அதிருப்தி

    திமுகவிலிருந்து வந்ததாக சொல்லப்பட்டாலும் திமுகவிலும் இவர் இல்லை என்று சேலத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவர் எப்படி பாஜகவில் இணைந்தார், பாஜக எப்படி இவரை ஏற்றுக் கொண்டது என்று தெரியவில்லை. ஆனால் இவரது சேர்க்கையால் பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனராம். இவரது வருகையால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

    English summary
    BJP senior leaders are upset over the joining of Muraleethran from Salem into the party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X