Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடித்து தூக்கும் சேலம், தஞ்சை.. வந்துவிட்டது பெரிய ஐடி பார்க்.. இன்றே நடந்த.. மிகப்பெரிய மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சாவூர் மற்றும் சேலத்தில் ஐடி நிறுவனங்களை கொண்டு வரும் விதமாக கட்டப்பட்ட நியோ டைடல் பார்க் இன்று திறக்கப்பட உள்ளது. இந்த டைடல் பார்க் அறிவிக்கப்பட்டு 1 வருடத்திற்குள் கட்டப்பட்டு தற்போது திறப்பு விழா நடந்து உள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது சிறிய.. மூன்றாம் கட்ட நகரங்கள் எல்லாம் வேகமாக வளர தொடங்கி உள்ளன. சிறிய நகரங்கள், இரண்டாம் கட்ட நகரங்களில் ஐடி பார்க்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக சேலம் டைடல் நியோ பார்க் 55,000 சதுர அடி பரப்பளவில் 3 தளங்களில் கட்டப்பட்டுள்ளது.

sipcot theni

தஞ்சாவூர் மற்றும் சேலத்தில் ஐடி நிறுவனங்களை கொண்டு வரும் விதமாக இந்த பார்க் கட்டப்பட்டு உள்ளது. இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முறைப்படி திறந்து வைத்துள்ளார். ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் புதிய ஐடி பார்க்குகள், சிப்காட், நியோ டைடல் பார்க்குகள் கட்டப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர் டைடல் நியோவில் பின்வரும் நிறுவனங்கள் அமைந்துள்ளன
Hamly Business Solutions
Inforios Software Technologies

சேலம் டைடல் நியோவில் பின்வரும் நிறுவனங்கள் அமைந்துள்ளன
Namma Office
AKS Hitech Smart Solutions
Tamil Zorous
Telth Healthcare
Axis Healthcare

வேகமாக வளரும் தமிழ்நாடு: ஒரு காலத்தில் சென்னை, கோவை மட்டும் வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் தற்போது பல சிறிய மாவட்டங்கள், 3 டயர் சிட்டிகளில் சிப்காட் அமைக்கும் பணிகளை தொடங்கி உள்ளன.தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களில் சிப்காட் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழக அரசு, திருப்பூரில் அதிநவீன டைடல் பூங்காவைக் கட்டி வருகிறது. விரைவில் இந்த ஐடி பார்க் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ஐடி புரட்சியை இரண்டாம் நிலை நகரங்களுக்கு தமிழக அரசு கொண்டு செல்கிறது.

66,139 சதுர அடி பரப்பளவில், ஒவ்வொரு தளமும் 6,500 சதுர அடியில் 8 மாடிகளைக் கொண்ட இந்த வசதி இந்த ஆண்டு டிசம்பருக்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் திருப்பூரில் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு புதிய வேலை வாய்ப்புகளை கொண்டு வரும்.

அதேபோல் தூத்துக்குடியில் ஐடி நியோ பார்க் கட்டப்பட்டு வருகிறது. இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

வளரும் சிப்காட்: தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் அமைக்கப்படும் சிப்காட் குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா சமீபத்தில் அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் சிப்காட் பெரிய அளவில் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழிற்சாலைகள் அமைய சிப்காட் மிகப்பெரிய காரணம் ஆகும்.

அந்த வகையில் 8 இடங்களில் சிப்காட் அமைக்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 8 புதிய SIPCOT பூங்காக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது:

1. ஸ்ரீபெரும்புதூர்- 750 ஏக்கர்
2. சென்னை ORR - 200 ஏக்கர்
3. ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி - 1,000 ஏக்கர்
4. பெரம்பலூர்- 100 ஏக்கர்
5. திருவெறும்பூர், திருச்சி- 150 ஏக்கர்
6. கும்மிடிப்பூண்டி, சென்னை - 1,500 ஏக்கர்
7. அரியலூர்- 150 ஏக்கர்
8. மன்னார்குடி- 150 ஏக்கர்

அசத்தல் முடிவு: அதன் ஒரு கட்டமாக பின் வரும் நகரங்களை புதிய தொழில் பூங்காக்களின் அமைப்பை சிப்காட் அமைக்க தொடங்கியுள்ளது.
1. திருமுடிவாக்கம், சென்னை
2. தேனி (உணவு+ மல்டி பார்க்)
3. காட்பாடி
4. பணப்பாக்கம், ராணிப்பேட்டை
5. வாரப்பட்டி, கோயம்புத்தூர்
6. தருமபுரி
7. நாகப்பட்டினம்
8. பாடலூர், பெரம்பலூர்
9. விருதுநகர்- பி.எம்.மித்ரா டெக்ஸ்டைல் ​​பார்க்
10. செங்காத்தாகுளம், திருவள்ளூர்
11. சிவகங்கை (2 கட்டங்கள்)
12. ஏ.சாத்தனூர் SEZ, கள்ளக்குறிச்சி
13. வைப்பார், தூத்துக்குடி
14. வேலாயுதபுரம், தூத்துக்குடி
15. மணக்குடி, ராமநாடு
16. சேலம் ஜவுளி பூங்கா
17. தலைவாசல், கள்ளக்குறிச்சி
18. சக்கரகோட்டை, ராமநாடு
19. மணல்லூர் (EV & EMC), திருவள்ளூர்

அடிக்கல் நாட்டு விழா: இது போக தமிழ்நாட்டில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தமாக 6,035 ஏக்கரில் இந்த பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

1. விருதுநகர்
2. தருமபுரி
3. தேனி
4. சிவகங்கை
5. தூத்துக்குடி (வைப்பார்)
6. ராமநாதபுரம்-1
7. ராமநாதபுரம்-2

ஆகிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. விரைவில் இதற்கான அடிக்கல் நாட்டு விழாக்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐடி பார்க்: ஏற்கனவே தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உட்பட 10 நகரங்களில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் தெரிவித்தது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் என்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஐடி பூங்காக்களில் புதிய நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் ஓசூர், கோவை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் ஐடி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையானது தாமதமின்றி செயல்படுத்தப்படும், என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+