அதிரடி காட்டும் அமைச்சர் ரமேஷ்.. சமயபுரம், வடபழனி கோயில்களில் அடுத்தடுத்து சஸ்பெண்ட் நடவடிக்கை
சென்னை: இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு தொடர் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின்பேரில் சமயபுரம் கோயில் அலுவலர் மற்றும் வடபழனி முருகன் கோயில் இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத் துறையில் நிர்வாகத்தை சீரமைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயில் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, முறைகேடுகள் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது என பல்வேறு நடவடிக்கைகளில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

கோயில்களில் நடைபெறும் விதிமீறல்கள், புகார்கள் மீது அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் நிர்வாகத்தில் ஊழல் தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அமைச்சர் ரமேஷின் உத்தரவின் பேரில் கோயில் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மணியம் பதவி வகித்து வந்த நபர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்தப் புகார் தொடர்பாக ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், வடபழனி முருகன் கோயில் இளநிலை உதவியாளரும் நிர்வாக ஒழுங்கின்மை காரணமாக
பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
