முட்டாள் ராவணன்.. வீடியோவில் பேசிட்டிருக்கும்போதே.. திடீரென திட்ட ஆரம்பித்த நித்யானந்தா!
நித்யானந்தா இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்
Recommended Video
சென்னை: "லட்சுமி என்னுடன் இருக்கிறாள்.. என் அடுத்த டார்கெட் இதுதான்.. ராமர் கோயில் கட்டினா இதுதான் நடக்கும்" என்று நித்யானந்தா புது வீடியோ ஒன்றினை வெளியிட்டு அடுத்த பரபரப்பை கிளப்பி உள்ளார்.
கைலாசா சமாச்சாரம் உச்சத்தில் உள்ளது.. சோஷியல் மீடியாவில் இப்போது கைலாசாதான் டிரெண்ட் ஆகி வருகிறது.
ஆனால் எதையுமே கண்டுகொள்ளாமல் நித்யானந்தா அடுத்தடுத்த வீடியோக்களை போட்டு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி இருப்பதாவது:-

கைலாசா
"சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள்ளும் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான். நான் இப்போது அரசியல் பற்றி பேச வரவில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன்.. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும்.

பொருளாதாரம்
ஏனெனில் சமூகத்துக்கு பங்களிப்பது தான் ராமரின் கொள்கை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட யார் நிதி அளித்தாலும் அது இந்திய பொருளாதாரத்துக்கு பங்களிப்பது ஆகும். நான் எந்த அமைப்பையும் சாராதவன்.. என்னுடைய சீடர்களும் சந்நியாசிகளும் உங்களால் முடிந்த அளவுக்கு ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

லட்சுமி
நானும் என்னுடைய வழியில் ராமர் கோவிலுக்கு பங்களிப்பேன். என்னிடம் ஒன்றும் இல்லை என நான் கூறப் போவது இல்லை. லட்சுமி என்னுடன்தான் இருக்கிறாள்" என்றார். இப்படி ராமனை பற்றி சொல்லி கொண்டே வந்த நித்யானந்தா, திடீரென ராவணனை திட்ட ஆரம்பித்துவிட்டார். இது சம்பந்தமான வீடியோவில், "ராவணன் நேரடியாக கைலாசத்தை தொட்டு தூக்க முயன்றான்.

ராவணன்
கைலாசத்தில் உள்ள சிந்தாமணி மண்டபம் தான் கைலாசத்தின் அருள் பொலிவுக்கு காரணம் என நினைத்தான். உடனே எனக்கு அந்த மண்டபம் வேண்டும் என சிவனிடம் கேட்டான். சிவனும் எடுத்துக்கொள் என்று கூறிவிட்டார். இந்த முட்டாள் ராவணனும் அந்த சிந்தாமணி மண்டபத்தை எடுத்து ஸ்ரீலங்காவில் தான் வைத்தான்" என்றார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications