Sanam Shetty: நீட் போராட்டத்தில் அந்த "பதாகை"! அரை மணி நேரத்தில் சந்தேகம் வந்துவிட்டது! சனம் ஷெட்டி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் போராட்டத்திற்கு சென்ற அரைமணி நேரத்தில் எனக்கு சந்தேகம் வந்தது என நடிகை சனம் ஷெட்டி ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேலும் விஜய் மிஸ்ஸிங் என்ற பதாகைகளையும் போராட்டக்காரர்கள் வைத்திருந்ததை பார்த்தாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

சென்னை புதுப்பேட்டை எல்ஜி சாலையில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைகளை உறுதி செய்யும் சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வர வலியுறுத்தி விழிப்புணர்வு அமைதி பேரணி நடந்தது.

Sanam Shetty

இதில் நடிகை சனம் ஷெட்டி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து குற்றங்களையும் புரிபவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த பேரணி!

நீட் போராட்டத்தில் நான் பங்கேற்ற போது சர்ச்சையாக பேசுகிறீர்கள் என கூறினார்கள். நான் பொய் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்கள். நான் அந்த கூட்டத்திற்கு சென்ற அரைமணி நேரத்திலேயே எனக்கு சந்தேகம் வந்தது. அந்த போராட்டதை கரப்பான்பூச்சி கட்சி முன்னெடுத்தது எனக்கு தெரியாது. கல்லூரி மாணவர்கள் போராட்டம் என்றுதான் நான் சென்றேன்.

ஆனால் அங்கு பாஜக முர்தாபாத், இந்தியா ஜிந்தாபாத் உள்ளிட்ட இந்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டம் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு "சிஎம் விஜய் மிஸ்ஸிங்" என்ற பதாகைகள் இருந்தன. அதை ஏன் வைக்க வேண்டும்.

விஜய் சார் மிஸ்ஸிங் என்றால் அதை பற்றி கேளுங்கள். பேசவே கூடாது என நான் சொல்லவில்லை. மாணவர்களின் போராட்டத்தை தவறாக பயன்படுத்தி திசை திருப்பி மக்கள் மனதை கையாள முயற்சிக்கிறார்கள்.

நான் சென்றதால் அங்கு போராட்டம் சிதைந்து விட்டது என கூறுவது தவறு என கூறிய சனம் ஷெட்டியிடம் நிருபர்கள் மாறி மாறி கேள்வி எழுப்பியதால் அவர் டென்ஷனாகி சென்றுவிட்டார். மேலும் அங்கிருந்தவர்கள் மாணவர்களே கிடையாது என சனம் சொன்ன போது, நீங்கள் மட்டும் ஸ்டூடன்ட்டா மேடம் என நிருபர் கேட்டார்.

அதற்கு சனம் ஷெட்டி, நான் மாணவி கிடையாதுதான், ஆனால் எனக்கு எந்த அஜெண்டாவும் இல்லை, நான் எந்த பதவியிலும் கட்சியிலும் இல்லை, நான் ஒரு சாதாரண பொதுமக்களில் ஒருவராகதான் சென்றேன் என கூறிவிட்டுச் சென்றார்.

சென்னை பாலன் இல்லத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் மாணவர்கள் மத்தியில் சனம் ஷெட்டி பேசுகையில், "இங்கு எத்தனை பேர் கரப்பான்பூச்சி கட்சியினர்? எத்தனை பேர் மாணவர்கள்? எத்தனை பேர் பொதுமக்கள், இங்கே நடுநிலையோடு இருக்கும் மக்களாகதான் நான் இங்கே நிற்கிறேன். இங்கே பேசுகிறீர்களா இல்லையா என கேட்டார்கள்.

நான் கோபித்துக் கொண்டு வெளியே போய்விட்டேன். ஏனென்றால் இங்கே பேசியவர்களுடைய பேச்சு, கட்டுக்கதைகள், அவர்களது எண்ணங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. இது மாணவர்களின் போராட்டம். இந்த போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இங்கே நான் வந்திருக்கிறேன். இந்த மேடையை அரசியலுக்காக பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்தான் ஜோக்கர். நாங்கள் கிடையாது.

நான் விஜய்யின் தீவிர ரசிகை, நேற்று கூட ஜனநாயகன் FDFS பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்" என சனம் பேசிக் கொண்டிருந்த போதே போராட்டக்காரர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.

இதையடுத்து சனம் ஷெட்டி , "நான் பேசவா இல்லை போகவா" என கேட்டார். ஆனால் அவரை பேசவிடவில்லை என சொல்லப்படுகிறது. போராட்டக்காரர்களும் கூச்சலிட்டனர்.

இதனால் கோபமடைந்த சனம், "இது ஜனநாயகம் இல்லை, ஒவ்வொரு குடிமகனுக்கு பேச உரிமை இருக்கிறது. நீங்கள் மாணவர்களுக்காக போராட்டம் செய்யும் போது நான் அவர்களுக்காக மட்டும் தான் பேசுவேன். எவனும் சொல்லி நான் இங்கு வரல. நானா வந்திருக்கேன்" என அவர் சொல்லிக் கொண்டிருந்த போதே மைக்கை அவரிடம் இருந்து பறித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சனம் ஷெட்டி அங்கிருந்து கோபமாக வெளியேறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+