Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனாதன சர்ச்சை! உதயநிதி மீது நடவடிக்கை கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனாதனத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின், கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,

Sanatana Controversy: Supreme Court refuses to hear plea seeking action against Udayanidhi Stalin as urgent case

"சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்" என்று பேசியிருந்தார்.

இவரது பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்துள்ளார். டெல்லி, பீகாரில் உதயநிதி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல உத்திரப் பிரதேசம் ராம்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் கண்டனம் அதிகரித்திருக்கிறது.

இதுபோன்ற கண்டனங்களுக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "நான் எந்த சட்ட சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன். இது போன்ற காவி மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியை பின்தொடர்பவர்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம். இதனை இன்றும் சொல்வேன், நாளையும் சொல்வேன், என்றென்றைக்கும் சொல்வேன். திராவிட மண்ணில் சனாதனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் இருந்து ஒரு துளி கூட பின்வாங்க மாட்டோம்" என்று கறாராக கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், "சனாதனம் குறித்த அவதூறு கருத்துக்களுக்கு மத்திய அமைச்சர் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மோடியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "பிரதமர் மோடியின் அறிவிப்பு மிகவும் ஆத்திரமூட்டல் மட்டுமல்ல, அரசியலமைப்பிற்கும் எதிரானது" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மீது நடவடிக்கை கோரும் மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வலதுசாரி வழக்கறிஞர்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் நீதிபதிகள் இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறியுள்ளனர். அதாவது மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்க வேண்டும் எனில் அது குறித்து முன்கூட்டியே நீதிமன்ற பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

அதன் பின்னர் பதிவாளர் ஒரு எண்ணை கொடுப்பார் இதை வைத்துதான் அவசர மனு குறித்த கோரிக்கையை எழுப்ப முடியும். இப்படி இருக்கையில், சில வழக்கறிஞர்கள் திடீரென தலைமை நீதிபதியின் முன் வந்து "சனாதனம் குறித்து அவதூறாக பேசிய உதயநிதி, பிரியங்க் கார்கே மீதான வழக்கு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர். இதை கேட்டு கோபமடைந்த தலைமை நீதிபதி,

"எந்த வழக்காக இருந்தாலும் உரிய வழிமுறையை பின்பற்ற வேண்டும். வழக்கறிஞர்களே இப்படி ஒழுங்கீனமாக நடந்துக்கொள்ளலாமா?" என்று கேள்வியெழுப்பி இதனை அவசர வழக்கா விசாரிக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதனையடுத்து மீண்டும் திங்கட்கிழமை இதே கோரிக்கைகளை வலதுசாரி வழக்கறிஞர்கள் எழுப்ப இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+