லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப் மிட்டல் விடுவிப்பு.. துரைகுமார் நியமனம்.. EC அதிரடி
சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்ட சந்தீப் மிட்டல் ஆயுதப்படை டிஜிபியாக செயல்படுவார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்புது றை (பொறுப்பு) இயக்குனராக துரைகுமார் ஐ.பி.எஸ் நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திமுக எம்பி டி ஆர் பாலு கடிதம் அளித்ததை அடுத்து அதிகாரி மாற்றத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளராக தன்னை காட்டிக்கொள்பவர் சந்தீப் மிட்டல் என டிஆர் பாலு கூறியிருந்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றம்
தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கொடுத்த புகாரின் பேரில் தமிழக தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம், தமிழக லஞ்ச ஒழிப்பு டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டனர். இதையடுத்து புதிய லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டலை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுமாறு தேர்தல் ஆணையத்துக்கு திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர். பாலு கடிதம் எழுதி இருந்தார். ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் மிட்டலை லஞ்ச ஒழிப்புத்துறையின்-இன் தலைமை இயக்குநராக நியமித்திருப்பதற்கு கடும் ஆட்சேபணையைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் டிவிஏசியின் இன் தலைமை இயக்குநர் பதவிக்கும், தேர்தல் நடத்தும் பணிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
ஆயுதப்படை டிஜிபியாக மாற்றம்
அரசியலமைப்பின் 324-வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்பது, வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் தேர்தல்களை நடத்துதல் ஆகிய பணிகளை மேற்பார்வையிடுதல், வழிநடத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு மட்டுமே உரியதாகும் என்று திமுக தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. தேர்தல் ஆனையத்திற்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ள நிலையில், தனது முடிவில் இருந்து தேர்தல் ஆணையம் பின்வாங்கியுள்ளது.
இதன்படி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்ட சந்தீப் மிட்டலை ஆயுதப்படை டிஜிபியாக மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த நிலையில் புதிய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (பொறுப்பு) இயக்குனராக துரைகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
ஜனாதிபதியிடம் விருது வாங்கியவர்.. சென்னையின் புதிய கமிஷனர்! யார் இந்த அபின் தினேஷ் மோதக்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன












Click it and Unblock the Notifications