விஜய்யுடன் தாம்பத்திய உறவு.. முக்கிய பாயிண்ட்டை போட்டு உடைத்த சங்கீதா! நடந்தது இதுதான்!
சென்னை: விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று அவரது மனைவி சங்கீதா, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தை நாடியுள்ளார். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில், தாம்பத்திய உறவு குறித்தும் சங்கீதா குறிப்பிட்டிருக்கிறார்.
திரைத்துறையின் உச்சத்தில் இருந்த விஜய், தற்போது அரசியல் நோக்கி பயணித்திருக்கிறார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட இருக்கிறார். இப்படி இருக்கையில் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில், மனைவிக்கு துரோகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக, விஜய்யின் மனைவி சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக விவாகரத்தையும் கோரியுள்ளார்.

இது குறித்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில், "நடிகை, விஜய்யுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்வதும், அதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவிக்காததும், தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
இதைவிட முக்கியமான விஷயம் விஜய் என்னை நடத்திய விதம்தான். விஜய் என்னை கடுமையாக நடத்தினார். சண்டைக்கான காரணம் குறித்து பேசியபோது, அதைப்பற்றி பேசுவதை தவிர்த்தார். ஒரு கட்டத்தில் வீட்டின் ஒரு பகுதியிலேயே தன்னை தனிமைப்படுத்தி வாழ வைத்தார்.
எனவே எனக்கு விவாகரத்து வேண்டும். மட்டுமல்லாது விஜய்யின் வருமானம் மற்றும் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப ஒரு கவுரவமான மற்றும் நியாயமான ஜீவனாம்ச தொகையை தனக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். மிக முக்கியமாக, தாம்பத்திய உறவு குறித்தும் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதாவது விஜய் தன்னுடனான தாம்பத்திய உறவை தவிர்த்துவிட்டார் என்று கூறியிருக்கிறார். விஜய் உணர்வுப்பூர்வமாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னை புறக்கணித்துவிட்டார். அவரது சமூக மற்றும் தொழில்முறை வாழ்க்கையிலிருந்து என்னை புறக்கணித்துவிட்டார் என்றும் கூறியிருக்கிறார். இது விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்றும் சங்கீதா கூறியிருக்கிறார்.
மேலும் விவாகரத்து கோரியுள்ள சங்கீதா, விஜய்யின் வருமானம் மற்றும் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப ஒரு கவுரவமான மற்றும் நியாயமான ஜீவனாம்ச தொகையை தனக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை அல்லது விஜய் தனக்கு ஈடான மாற்று வசதியை செய்து தரும் வரை நீலாங்கரையில் உள்ள தற்போதைய வீட்டிலேயே வசிப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும். இந்த விவாகரத்து வழக்குக்கான அனைத்து செலவுகளையும் விஜய்யே ஏற்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications