வேற யாராவதுன்னா ஜெயில்தான்.. விஜய்யை கட்டிப்போட்ட அந்த 25 பேஜ்.. அதிர்ச்சி தரும் 4 முக்கிய புகார்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் மற்றும் திரையுலகையே உலுக்கியிருக்கும் விவகாரம், விஜய்யிடமிருந்து சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு. "எங்கள் திருமண வாழ்க்கை என்பது வெறும் காகிதத்தோடு முடிந்துவிட்டது" என அந்த மனுவில் சங்கீதா உருக்கமாகக் குறிப்பிட்டிருப்பதுதான் இப்போதைய டாக் ஆஃப் தி டவுன்.

ஒரு சராசரி மனிதன் மீது சுமத்தப்பட்டால், சட்டத்தின் பிடி இவ்வளவு தளர்வாக இருக்குமா என்ற கேள்வியும் ஒருபுறம் எழாமல் இல்லை. அப்படி என்னதான் இருக்கிறது அந்த மனுவில்?

sangeetha vijay

1. "மூன்றாவது நபர்" - விஸ்வரூபம் எடுத்த விவகாரம்!

சங்கீதாவின் மனுவில் மிக முக்கியக் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுவது 'Adultery' (முறைதகா உறவு). 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே விஜய்க்கும், ஒரு பிரபல நடிகைக்கும் இடையிலான நெருக்கம் எல்லை மீறியதாக சங்கீதா குறிப்பிட்டுள்ளார். இதனைத் தட்டிக்கேட்டபோது, அந்த உறவைத் துண்டித்துக் கொள்வதாக விஜய் உறுதியளித்ததாகவும், ஆனால் அதை அவர் நிறைவேற்றாமல் தன்னிடம் "தொடர்ந்து பொய் சொல்லி ஏமாற்றியதாகவும்" மனுவில் கூறப்பட்டுள்ளது.

2. மனரீதியான சித்தரவதை மற்றும் 'தனிமை'!

சங்கீதா தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள மற்றொரு குற்றச்சாட்டு 'Cruelty' (கொடுமை). விஜய் தன்னைத் தனது சமூக மற்றும் தொழில்முறை வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாகத் துண்டித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். வீட்டில் ஒன்றாக இருந்தாலும், விஜய் தன்னிடம் ஒரு அந்நியரைப்போலவே நடந்துகொண்டார் என்றும், பேச்சுவார்த்தை என்பது அறவே இல்லை என்றும், இது அவருக்குக் கடுமையான மன அழுத்தத்தைத் தந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தட்டிக்கேட்டால் தன்னை அவர் மோசமாக நடத்தினார் என்று கூறி உள்ளார்.

3. பொருளாதாரக் கட்டுப்பாடு - 'சாமான்யனுக்கு என்ன நடக்கும்?'

மிகவும் அதிர வைக்கும் புகாராகப் பார்க்கப்படுவது, சங்கீதாவிற்கு வழங்கப்பட்டு வந்த பொருளாதார ரீதியான கட்டுப்பாடுகள். அவருக்குச் சொந்தமாக இருந்த சில வசதிகள் பறிக்கப்பட்டதாகவும், சுதந்திரமாகச் செயல்பட விடாமல் முடக்கப்பட்டதாகவும் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுவாக ஒரு சாமானிய மனிதன் மீது 'மனைவிக்குச் செலவுக்குத் தராமல் கொடுமைப்படுத்துகிறார்' என்ற புகார் 498A பிரிவின் கீழ் வந்தால், காவல்துறை விசாரணை மற்றும் கைது நடவடிக்கை வரை செல்ல வாய்ப்புள்ளது. சாதாரண நபர் மீது மகளிர் ஸ்டேஷனில் இப்படி எல்லாம் கேஸ் போட்டால்.. லேடி போலீஸ் அதை டீல் செய்யும் விதமே வேறாக இருக்கும்.

ஆனால், இது சிவில் நீதிமன்றத்தில் (Family Court) விவாகரத்து மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இதன் போக்கு வேறாக இருக்கிறது.

4. சமூக வலைதள அவமானம்

அந்தப் பிரபல நடிகை, விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டதும், அதற்கு விஜய் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்ததுமே தன்னைத் தீராத வேதனையில் ஆழ்த்தியதாகச் சங்கீதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் சொல்வது என்ன?

சங்கீதா இந்த மனுவை 1954-ம் ஆண்டு சிறப்புத் திருமணச் சட்டத்தின் (Special Marriage Act) கீழ் தாக்கல் செய்துள்ளார். இதில்:

பிரிவு 27(1)(a): முறைதகா உறவு (Adultery)

பிரிவு 27(1)(b) & (d): கொடுமை மற்றும் பிரிந்து வாழ்தல் (Cruelty & Desertion)

பிரிவு 36 & 37: இடைக்கால மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் (Alimony)

இது போன்ற புகார்கள் மற்ற வழக்கில் வைக்கப்பட்டால் அந்த நபருக்கு ஜெயில்தான். விஜய் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+