Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் விவாகரத்து மோதல்.. 'ஆக்ரோஷ' சங்கீதா... பிரஸ் மீட்டில் வெடிக்கப்போகும் உண்மைகள்.. செம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரையுலகின் 'க்யூட் ஜோடி' என்று பெயரெடுத்த தளபதி விஜய் - சங்கீதா தம்பதியினரிடையே விரிசல் ஏற்பட்டுள்ள செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக கோலிவுட் வட்டாரத்தில் தகித்துக்கொண்டிருக்கின்றன. இதுவரை சமூக வலைதள வதந்திகளாகவும், கிசுகிசுக்களாகவும் மட்டுமே பார்க்கப்பட்ட இந்த விவகாரம், இப்போது அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக சங்கீத தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள திருமணம் கடந்த உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்.

Sangeetha may give pressmeet soon against TVK Vijay amid the divorce row

திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.

நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.

நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக கூறிய விஜய் திருந்தவே இல்லை. 2021ல் தொடங்கி என்னை தனியாக வாழுமாறு நிர்பந்தித்தார்.

விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை 'அந்த' நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
ஆனால், அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார்.

என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருவது எனக்கும் எனது, பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன், என்று சங்கீதா மனுவில் கூறி உள்ளார்.

விஜய் சங்கீதா விவாகரத்து

தகவலறிந்த வட்டாரங்களின்படி, சங்கீதா விரைவில் ஒரு முக்கியப் பத்திரிகையாளர் சந்திப்பை (Press Meet) நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பில், குடும்ப நல நீதிமன்றத்தில் (Family Court) தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மற்றும் விவாகரத்து தொடர்பான பின்னணி குறித்து அவர் விரிவாக விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிகிறது.

சங்கீதாவின் ஆக்ரோஷம்: என்ன நடந்தது?

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்யின் நிழலாகவும், அவருக்குப் பக்கபலமாகவும் இருந்த சங்கீதா, தற்போது விஜய் மீது கடும் கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அமைதியாகவே இந்த விஷயத்தைக் கையாள நினைத்தாலும், சமீபகாலமாகத் தன்னைச் சுற்றி நிலவும் சில சூழல்கள் அவரை இந்த அதிரடி முடிவுக்குத் தள்ளியுள்ளனவாம்.

"எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு" என்பது போல, சங்கீதா தரப்பில் இருந்து கிளம்பும் தகவல்கள் அதிர்ச்சியூட்டுபவையாக உள்ளன. குடும்பப் பிரச்சனைகளைத் தாண்டி, சில தனிப்பட்ட காரணங்களே அவர் இந்த அளவுக்கு ஆவேசமடையக் காரணம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். முக்கியமாக சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் அவரை மோசமாக தாக்கியதே சங்கீதா இந்த முடிவை எடுக்க காரணம் என்கிறார்கள்.

அரசியல் களமும்... அந்த மௌனமும்!

மறுபுறம், தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ள விஜய், தனது முழு கவனத்தையும் கட்சியின் மீதும், தனது கடைசித் திரைப்படத்தின் மீதும் செலுத்தி வருகிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு அவர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால், சங்கீதாவின் இந்த திடீர் 'பிரஸ் மீட்' திட்டம் விஜய்யின் அரசியல் பிம்பத்திற்குப் பெரும் சவாலாக அமையும் எனப் பேச்சு எழுந்துள்ளது.

இந்தச் சந்திப்பில் சங்கீதா பேச வாய்ப்புள்ள முக்கிய அம்சங்கள்:

குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பின்னணி.

நீண்ட கால மௌனத்திற்குப் பிறகு இப்போது பேச முடிவெடுத்ததற்கான காரணம்.

பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் ஆதரவு.

கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரங்கள் இப்போது சங்கீதாவின் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பிற்காகவே ஆவலுடன் காத்திருக்கின்றன. அங்கு அவர் சொல்லப்போகும் ஒவ்வொரு வார்த்தையும் தமிழகத்தின் ஹாட் டாபிக்காக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+