மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் உதவி கேட்ட சங்கீதா.. விஜய் ஆடும் ஆட்டம்! முதலமைச்சர் போட்ட உத்தரவு!
சென்னை: விஜய் நடிகை ஒருவருடன் கள்ள உறவில் இருப்பதாக, அவரது மனைவி சங்கீதா குற்றம்சாட்டி விவாகரத்து கோரியிருக்கிறார். இந்நிலையில் இந்த விஷயம் குறித்து, முதலமைச்சர் குடும்பத்திடம் சங்கீதா உதவி கேட்டதாக திருச்சி சூர்யா கூறியிருக்கிறார்.
ஒன் இந்தியா யூடியூப் சேனலுக்கு இது குறித்து, திருச்சி சூர்யா பேட்டி கொடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது, "விஜய் விஷயம் குறித்து, முதலமைச்சர் குடும்பத்தில் நெருக்கமான நபரிடம் சங்கீதா பேசியிருக்கிறார். ஆனால், முதலமைச்சர் இந்த விஷயத்தில் எதையும் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டார். தேர்தல் வரை, இதில் எதையும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார்" என்று கூறியிருக்கிறார்.

விஜய் அரசியல் கட்சியை தொடங்கியதிலிருந்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறார். குறிப்பாக கரூர் சம்பவத்தில், அவரை பார்க்க வந்து, நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பலியான விஷயத்திலும், அதை விஜய் கண்டும் காணாமலும் சென்ற விஷயத்திலும் விஜய்யின் பெயர் ரொம்பவே டேமேஜ் ஆகியிருந்தது.
அதை தொடர்ந்து வருமான வரி விஷயத்திலும், நீதிமன்றத்தால் சிக்கலுக்கு உள்ளானார் விஜய். தற்போது அவரது மனைவியே விஜய் குறித்து சரமாரியாக விமர்சித்திருக்கிறார். செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், விஜய் மனநலம் பாதிக்கபட்டவர் என்றும், அவர் தன்னை தாக்கினார் என்றும், திருமணத்தை மீறிய உறவை கேள்வி எழுப்பியபோது, தன்னை பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்துவதாகவும் சங்கீதா தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல, இந்த விஷயத்தை 2021ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது, அதை கைவிட்டுவிடுவதாக கூறியிருந்தார். ஆனால், தனக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்றும் கூறியிருந்தார். நடிகையுடன் தொடர்ந்து உறவில் இருந்து வருவதாகவும், நடிகையும் இவருடன் இருக்கும் படத்தை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்துள்ளார் என்றும் கூறியிருந்தார். இப்படி இருக்கையில், விஜய் தொடர்பா, முதலமைச்சரின் குடும்பத்தில் சங்கீதா உதவி கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை!












Click it and Unblock the Notifications