“சந்தான பாரதி”க்கும் அமித்ஷாக்கும் வித்தியாசம் தெரியாத சங்கிகள்.. பொங்கிய டிஆர்பி ராஜா - என்னாச்சு?
சென்னை: சந்தான பாரதிக்கும் அமித்ஷாவுக்கும் வித்தியாசம் தெரியாத சங்கி மங்கிகளுக்கு தொழில்நுப்ட கோளாறுக்கும் முடக்கத்துக்கு வித்தியாசம் தெரியாதது விந்தை இல்லை என்று திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் சமூக வலைதளங்களுக்கு என தனி பிரிவை அமைத்து பெரும் தொகையை அதற்கென செலவிட்டு வருகின்றன.
கட்சித் தலைவர்களின் அறிக்கைகள், கட்சி நிகழ்வுகள், எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனங்கள் என அனைத்தும் ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் போன்ற தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

ட்விட்டர் கணக்குகள்
கட்சிகளின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள், நாளேடுகளைவிட அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளில் வெளியாகும் குறுந்தகவல்களே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி சமூக வலைதள பிரச்சாரங்களுக்கு என பெரும் தொகையை செலவு செய்து வருகிறது. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளும் இதற்கென தனி குழுவை வைத்துள்ளன.

திமுக ஐடி விங்
அதேபோல் தமிழகத்தில் திமுகவும் தொழில்நுட்ப பிரிவிற்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கி வருகிறது. தலைவர்களின் ட்விட்டர் கணக்குகளை கடந்து, திமுகவுக்கு என தனி ட்விட்டர் கணக்கும், திமுக ஐடி விங்கிற்கு என தனி ட்விட்டர் கணக்கும் செயல்பட்டு வந்தது. திமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் கட்சியின் நிகழ்வுகள், திமுக அரசின் திட்டங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கள் போன்றவை பகிரப்பட்டு வருகின்றன.

தலைவர் டிஆர்பி ராஜா
அதேநேரம் திமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கட்சிக்கு எதிரான அவதூறுகள் குறித்த விளக்கமும், சமூக வலைதள பிரச்சாரங்களும், திமுக ஐடி விங்கின் செயல்பாடுகளும், மத்திய அரசு மீதான விமர்சனங்களும், ஊடக செய்திகளும் பகிரப்பட்டு வந்தன. இந்த பிரிவின் தலைவராக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா பொறுப்பேற்றதிலிருந்து அதன் வேகம் மேலும் அதிகரித்தது.

செயல்படாத ட்விட்டர் கணக்கு
குறிப்பாக திமுக மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பகிரப்படும் வதந்திகளை கண்டுபிடித்து சம்பந்தபட்ட நபர் மீது புகாரளிப்பது, கணக்குகளை ரிப்போர்ட் செய்து போன்ற பணிகளை திமுக ஐடி விங் மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், சற்று முன் திமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு செயல்படாததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

டிஆர்பி ராஜா ட்வீட்
இதனை தொடர்ந்து பாஜக ஆதரவாளர்கள் திமுக ஐடி விங்கின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அந்த கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிஆர்பி ராஜா, "சந்தான பாரதிக்கும் அமிட் ஷாவுக்கும் வித்தியாசம் தெரியாத சங்கி மங்கிகளுக்கு tech glitchக்கும் suspensionக்கும் வித்தியாசம் தெரியாதது விந்தை இல்லை." என்று விமர்சித்துள்ளார்.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications