Sani Peyarchi 2026: திருநள்ளாறு கோவிலில் சனி பெயர்ச்சி விழாவுக்கான தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா?
சென்னை: திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் 2026 மார்ச் 6ம் தேதி சனிபெயர்ச்சி விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சனி பெயர்ச்சி தொடர்பான பல்வேறு குழப்பங்கள் தொடர்ந்து வரும் நிலையில் கோவில் நிர்வாகம் அதனை தெளிவுப்படுத்தி உள்ளது.
சனிபகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வரை வலம்வருவார். சிலவேளையில் ஒரு ராசியில் 3 ஆண்டும், இன்னொரு ராசியிலும் 2 ஆண்டும் இருப்பார். மொத்தம் 12 ராசிகளையும் வலம்வர 30 ஆண்டுகள் வரை எடுக்கும்.
சனிப்பெயர்ச்சி.. இந்த வார்த்தையை கேட்டவுடனேயே பலருக்கும் உடல் நடுங்கிவிடும். குறிப்பாக ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்றால் சனி பெயர்ச்சி எப்போது? சனி பெயர்ச்சியால் தனது ராசிக்கு ஏற்படப்போகும் விளைவு என்ன?, அதற்கான பூஜை, பரிகாரங்களை அறிந்து செய்வது வழக்கமாக உள்ளது.

குறிப்பாக சனிபகவானால் ஏற்படப் போகும் பிரச்சனைகளில் இருந்து விடுபட பலரும் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். குறிப்பாக புதுச்சேரியின் காரைக்கால் அருகே திருநள்ளாறு உள்ளது. இங்கு பிரசித்திப்பெற்ற தர்பார்ண்ஸ்வரர் கோவிலில் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. சனிப்பெயர்ச்சி விழா என்பது இங்கு சிறப்பாக நடைபெறும். இங்கு வழிபாடு செய்தால் சனி பகவனால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது.
இதனால் தான் ஒவ்வொரு சனி பெயர்ச்சி நாளிலும் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் தான் 2026ம் ஆண்டுக்கான சனி பெயர்ச்சி விழாவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2026ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி திருநள்ளாறு கோவிலில் சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
அன்றைய தினம் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் இடம்பெற உள்ளது. திருநள்ளாறு கோவிலை எடுத்து கொண்டால் வாக்கிய பஞ்சாங்க முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் வாக்கிய பஞ்சாங்க முறைப்படி சனீஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவுக்கான தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக திருக்கணித பஞ்சாங்க படி கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி சனிபெயர்ச்சி நடந்தது. 29.03.2025 தேதியில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் மாறினார். 03.06.2027 வரை இரண்டரை வருட காலத்துக்கு மீன ராசியில் சனிபகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். ஆனால் வாக்கிய பஞ்சாங்கப்படி செயல்படும் திருநள்ளாறு கோவிலில் 2026 மார்ச் 6ம் தேதி தான் சனிபெயர்ச்சி எனவும், அன்றைய தினம் தான் கோவிலில் சனிபெயர்ச்சி விழா நடப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications