சனி பெயர்ச்சி 2023: அதிகார பதவி...செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் சனிபகவான்..யாருக்கு கிடைக்கும்?

சனி பகவான் சகல செல்வங்களையும் அள்ளிக்கொடுப்பவர். அதே நேரத்தில் அதிகார போதையில் ஆடுபவர்களை தலையில் தட்டி தடுமாற வைத்து படிப்பினைகளை கற்றுக்கொடுப்பார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி கடந்த 17ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. சனி பகவான் கோச்சாரப்படி ஒருவரின் ராசிக்கு வரும் இடத்தைப் பொருத்து பலாபலன்கள் கிடைக்கும். தசாபுத்தி நடைபெறுவதை பொறுத்தும் ஒருவரின் சுய ஜாதகத்தில் சனிபகவான் பயணம் செய்யும் இடத்தை பொறுத்தும் நற்பலன்களோ..தீய பலன்களோ நடைபெறும். ஒருவரது ராசிக்கு 3, 6, 11ஆம் வீடுகளில் சனிபகவான் பயணம் செய்யும் காலம் நல்ல பலன்களை கொடுப்பார். அதே நேரத்தில் 4ஆம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாகவோ, 8ஆம் இடத்தில் அஷ்டம சனியாகவோ பயணம் செய்யும் காலத்தில் பாதிப்புகளை தருவார் சனிபகவான். 5ஆம் இடத்தில் புண்ணிய சனியாகவோ, 7ஆம் இடத்தில் கண்டச்சனியாகவோ பயணம் செய்யும் போது நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் கிடைக்கும். 1,2,12ஆம் இடங்களில் சனிபகவான் பயணம் செய்யும் போது ஏழரை சனியாக பலவிதமான படிப்பினைகளை அந்த ராசிக்காரருக்கு கொடுத்து உண்மை நிலையை உணர வைப்பார் சனிபகவான்.
ஒருவரின் சொந்த ஜாதக கட்டத்தில் சனிபகவான் எங்கு அமர்ந்து இருக்கிறார் என்பதை பார்த்து அவர்களுக்கு சனி பெயர்ச்சி காலத்தில் கோச்சார சனியால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

சனிபகவான் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் அமர்ந்து பயணம் செய்யும் போது சில பாதிப்புகள் ஏற்படும் அது சனியின் சொந்த வீடான மகரம், கும்பமாக இல்லாவிட்டால் நோய்கள் ஏற்படும், கடன் தொந்தரவுகள் உருவாகும். ஜென்ம லக்னம் ரிஷபம், மகரம், கும்ப ராசியாக இருந்து அங்கே சனி அமர்ந்திருந்தால் செல்வம் செல்வாக்கு கிடைக்கும். ஜென்ம லக்னம் துலாம்,தனுசு, மீனமாக இருந்து அங்கு சனி அமர்ந்தால் பதவியில் உயர்வு வாழ்க்கையில் ஏற்றம் கிடைக்கும். தலைமை பதவி தேடி வரும்.

Sani Peyarchi Palan 2023: Sani bhagavan gives Raja yogam and Position of power Who will get it?

சனிபகவான் இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருந்தால் நிறையப் பணத்தை தருவார். வெளிநாடு யோகம் தேடி வரும். 2ஆம் வீடு சனிபகவான் ஆட்சி உச்சம் பெற்ற நிலையாக இருந்தால் பலவித யோகங்களையும் கொடுத்து செல்வம் செல்வாக்கை அள்ளித்தருவார்.

ஜாதகத்தில் சனிபகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகர் புத்திசாலியாகவும் திறமைசாலியாகவும் இருப்பார். தர்ம குணமும் தயாள குணமும் இருக்கும். பலம் பெற்ற சனியாக அமர்ந்து பயண செய்தால் வாழ்க்கை துணையினால் செல்வம் சேரும் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வரும்.

சுக ஸ்தானமான 4வது வீட்டில் சனிபகவான் பலமற்று பயணம் செய்தால் அந்த ஜாதகருக்கு மகிழ்ச்சி, நிம்மதி கிடைக்காது. அப்பாவிற்கும் அம்மாவிற்கும் உடல் நலம் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் சனி பகவான் 4ஆம் வீட்டில் பலமாக பயணம் செய்தால் சுபிட்சமும் செல்வம் செல்வாக்கும் உண்டாகும் வாகன வசதி கிடைக்கும்.

Sani Peyarchi Palan 2023: Sani bhagavan gives Raja yogam and Position of power Who will get it?

பூர்வ புண்ணிய ஸ்தானமான 5வது வீட்டில் சனிபகவான் பயணம் செய்தால் அது புத்திர தோஷ அமைப்பை ஏற்படுத்தும். நோய்கள் ஏற்படும். அதே நேரத்தில் 5ஆம் வீட்டில் சனிபகவான் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் உயர்வு கிடைக்கும். 6ஆம் வீடு என்பது அற்புதமான இடம். ருண ரோக சத்ரு ஸ்தானம். ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் 6ஆம் வீட்டில் பலமாக இருந்தால் அவரை வெற்றி கொள்வதற்கு யாராலும் முடியாது. செல்வ சுகங்களுடன் பதவி பட்டங்களுடன் கவுரவமாக வாழ்வார். அதே நேரத்தில் சனியின் பலம் குறைந்திருந்தால் எதிரிகள் தொந்தரவு அதிகரிக்கும். நோய்களால் உடல் நலம் பாதிக்கப்படும்.

7ஆம் இடமான களத்திர ஸ்தானத்தில் சனிபகவான் பயணம் செய்தால் அலைச்சல் அதிகமாகும். தேவையற்ற சேர்க்கை உண்டாகும். ஆட்சி, உச்சம் பெற்ற நிலையாக இருந்தால் குடும்பத்தில் சுபிட்சங்கள் உண்டாகும். நிர்வாகத் திறமை அதிகரிக்கும். ஜாதகத்தில் 8ஆம் இடமான ஆயுள் ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்திருந்தால்
பண வரவு வரும். ஆயுள் தீர்க்கமாகும். சாதகமற்ற இடத்தில் சனி இருந்தால் கண் பிரச்சினை ஏற்படும். மகிழ்ச்சியும் நிம்மதியும் குறையும்.

சனிபகவான் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பலம் பெற்ற நிலையில் பயணம் செய்வது சிறப்பான அமைப்பு. செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். கல்வி, கலைகளில் சிறந்தவராக இருப்பார்கள். வெளிநாடு செல்லும் யோகத்தை தருவார் சனி பகவான். பலமற்ற நிலையில் சனிபகவான் இருந்தால் எதிரிகளால் தொல்லை ஏற்படும். காரியத்தடைகள் உண்டாகும்.

பத்தாம் இடம் தொழில் ஸ்தானம். சுய ஜாதகத்தில் சனிபகவான் பத்தாம் வீட்டில் பயணம் செய்தால் விவசாயம் தொழில் சிறக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார். வேலை, தொழில் செய்யும் இடத்தில் சிறந்த நிர்வாகியாக வழங்குவார். வெளிநாடு செல்லும் யோகம் வரும். சொத்து சேர்க்கை ஏற்படும். லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சனி பகவான் பயணம் செய்தால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளம் வயதிலேயே சொத்து சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் குடும்ப வாழ்க்கையில் சில பாதிப்புகளை சனிபகவான் ஏற்படுத்துவார்.

12ஆம் இடம் விரைய ஸ்தானம், அயன சயன ஸ்தானம். இந்த இடத்தில் ஒருவருக்கு சனிபகவான் பயணம் செய்தால் தொட்ட காரியங்களில் தடைகள் உண்டாகும். தொழிலில் தொடர் நஷ்டங்கள் ஏற்படும். அதே நேரத்தில் 12ஆம் சனி ஆட்சி உச்சம் பெற்ற இடமாக இருந்தாலோ, சுக்கிரன், குரு போன்ற சுப கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலே, சுக்கிரன் குரு போன்ற சுப கிரகங்களின் பார்வை இருந்தாலோ பாதிப்புகள் குறைந்து வெற்றிகள் கிடைக்கும்.

பொதுவாக ஒருவருக்கு நோய் ஏற்பட காரணம் அவர் முற்பிறவியில் செய்த பாவங்களே காரணம். பிறவி பாவங்களை தீர்க்கும்கடவுள் சனிபகவான். இதய நோய், வலிப்பு நோய், தலைசம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு, நரம்பு வியாதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் சனிபகவானை வழிபடலாம். நோய்கள் நீங்கி ஆயுள் பலம் அதிகரிக்க சனிபகவானுக்கு நீல வஸ்திரம் அணிவித்து நீல மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழைகளுக்கு எள் மற்றும் பிற சாதங்களை அன்னதானம் செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+