முகமது ஷமியுடன் திருமணமா? வலைதளங்களில் பரவும் போட்டோ! சானியா மிர்சா தந்த முக்கிய விளக்கம்
சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மற்றும் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் திருமணம் செய்து கொண்டதாக வலைதளங்களில் போட்டோ வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக சானியா மிர்சா தனது சைலன்ஸை உடைத்து முதல் முறையாக கருத்து தெரிவித்து உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக முகமது ஷமி உள்ளார். கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலககோப்பை போட்டியில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியை இறுதி போட்டி வரை முன்னேற்றியதில் முகமது ஷமிக்கு பெரிய பங்கு இருந்தது.

அதன்பிறகு அவர் காயமடைந்தார். காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமி அதில் இருந்து மீண்டு வந்து இந்திய அணியின் இடம்பிடிக்க முயற்சித்து வருகிறார். முகமது ஷமியின் மனைவி பெயர் ஹசீன் ஜாஹன். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் தான் முகமது ஷமி கடந்த 2018 ம் ஆண்டு முதல் மனைவி ஹசீன் ஜாஹனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஷமி மீது அவரது மனைவி பல்வேறு புகார்களை முன்வைத்ததால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். அதேபோல் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தனது கணவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை சமீபத்தில் விவாகரத்து செய்தார். சோயப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை 3வதாக திருமணம் செய்தார். இதற்கு முன்பாக சோயப் மாலிக் - சானியா மிர்சா விவாகரத்து பெற்றனர்.

தற்போது சானியா மிர்சா ஹைதராபாத்தில் தனது மகனுடன் வசித்து வருகிறார். அதோடு சில நாட்களுக்கு முன்பாக தான் அவர் ஹஜ் புனித யாத்திரைக்கு சென்றார். இந்நிலையில் தான் இணையதளத்தில் போட்டோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதாவது மனைவியை பிரிந்த முகமது ஷமியும், சோயப் மாலிக்கிடம் இருந்து விவாகரத்து பெற்ற சானியா மிர்சாவும் திருமணம் செய்து கொண்டதாக இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் போட்டோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சானியா மிர்சா விவாகரத்து விவகாரம் வெளிவந்தபோது அவர் முகமது ஷமியை கரம் பிடிக்க உள்ளதாக செய்திகள் பரவின. இதனால் இந்த போட்டோவை பலரும் நம்ப தொடங்கினர். ஆனால் உண்மை என்னவென்றால் சானியா மிர்சா - முகமது ஷமி ஆகியோர் திருமணம் செய்து கொள்ளவில்லை. மாறாக சானியா மிர்சா, சோயப் மாலிக்கை திருமணம் செய்த போட்டோவை எடுத்து சோயப் மாலிக்கின் முகத்துக்கு பதில் முகமது ஷமியின் முகத்தை வைத்து போலியான போட்டோ பரப்பப்பட்டது தெரியவந்தது.
இந்த வதந்தி பற்றி முகமது ஷமி- சானியா மிர்சா ஆகியோர் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் சானியா மிர்சா தனது சைலன்டை உடைத்து இன்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். அதில், ‛‛The Answer is Sabr, It's always sabr'' என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது ஷமிக்கும், அவருக்கும் திருமணம் நடந்ததாக போட்டோ பரவும் நிலையில் அவர் இந்த பதிவை செய்துள்ளார். அதாவது கொஞ்சம் பொறுமையாக இருங்கள் . எப்போதும் பொறுமையாக இருங்கள் என்பதாகும். இதன்மூலம் சானியா மிர்சா மறைமுகமாக வதந்திகளை பரப்ப வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளதோடு, முகமது ஷமியுடன் திருமணம் என்பது வதந்தியே என்பதை உறுதி செய்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications