போலீஸில் சிக்கிய சஞ்சீவி.. "நீயெல்லாம்.. சீ..." வாய் நிறைய திட்டிய பெண்கள்.. கல்லூரிமங்கனாக அமைதி
Recommended Video

சென்னை: போலீஸில் சஞ்சீவி சிக்கியவுடன் அவரை அங்கிருந்த பெண்கள் அவரை ஒருமையில் திட்டி தீர்த்தனர். எனினும் எதற்கும் பதில் அளிக்காமல் கல்லூரிமங்கனாகவே அவர் இருந்ததாக போலீஸார் கூறுகின்றனர்.
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தில்லை நகரில் மகளிர் விடுதியை நடத்தி வந்தார். அந்த விடுதியில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டதாக பெண்கள் கூறிய புகாரின் பேரில் போலீஸார் சஞ்சீவியை போலீஸார் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தால் அங்கு தங்கியிருந்த பெண்கள் ஒரு வித மனஉளைச்சலிலும் அதிர்ச்சியிலும் உள்ளனர். இதையடுத்து சஞ்சீவியிடம் இருந்து ஏராளமான வீடியோக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

நிம்மதி
அப்போது பெண்கள் அந்த வீடியோக்களை பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். உயரதிகாரிகளின் அனுமதியுடன் அவர்கள் அந்த வீடியோக்களை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அதை பார்த்த சில பெண்கள் தங்கள் தொடர்பான அந்தரங்க வீடியோக்கள் இல்லாதது குறித்து நிம்மதி அடைந்தனர்.

பொறுப்பு
ஆனால் இன்னும் சில பெண்களோ ஆத்திரத்தில் ஆவேசமடைந்து கத்தினர். அதில் ஒரு பெண், நீயெல்லாம் .... சீ... என ஒருமையில் சஞ்சீவியை திட்டினார். அப்போது போலீஸார் அந்த வீடியோவில் இருக்கும் எந்த விவகாரமும் வெளியே செல்லாது. இந்த சம்பவத்தால் உங்கள் வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கு நாங்கள் பொறுப்பு என அவர்களை தேற்றினர்.

ரகசிய கேமராக்கள் எவ்வளவு?
சஞ்சீவியிடம் போலீஸார் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் மௌனத்தையே பதிலாக கொடுத்தார். ஒரு கட்டத்தில் பேச ஆரம்பித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்த ரகசிய கேமராக்களை ரூ. 2500-க்கு வாங்கினேன்.

10 நாட்களுக்கு முன்பு
அவற்றை எப்படி பயன்படுத்துவது, எப்படி பொருத்துவது என்பது குறித்து இணையதளத்தில் தேடி கற்றுக் கொண்டேன். இந்த கேமராக்கள் ஏதேனும் சப்தம் கேட்டால் மட்டுமே பதிவாகும். இவற்றை கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் பொருத்தினேன் என்றார்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications