சாமியே இல்லன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமி தானே நீ.. சர்ச்சையில் சந்தானம்
சென்னை: சாமியே இல்லன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமி தானே நீ' என்று சந்தானம் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நான் அந்த ராமசாமி இல்லை என்று சாமி கும்பிட்டு கற்பூர தட்டு ஏந்தி நிற்கிறார் சந்தானம்.
சந்தானம் நடித்துள்ள 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் ட்ரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. கவுண்டமணி செந்திலின் புகழ்பெற்ற நகைச்சுவை கதாபாத்திரமான 'வடக்குப்பட்டி ராமசாமி' என்ற பெயரை தலைப்பில் வைத்திருக்கிறார்கள்.

காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் ஈ வெ ராமசாமியை கிண்டலடிக்கும் வகையில் ' இந்த சாமியே இல்லைன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமிதானே என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.
பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட நிலையில் நடிகர் சந்தானமும் பொங்கல் வைத்து கொண்டாடியிருக்கிறார். வடக்குப்பட்டி ராமசாமி படத்தை புரமோட் செய்வது போல ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.
இந்த சாமியே இல்லைன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமிதானே நீ என்று ஒருவர் கேட்க.. சந்தானமோ பொறுமையாக சாமிக்கு கற்பூரம் ஏற்றி நான் அந்த ராமசாமி இல்லை என்று சொல்லி கற்பூர தட்டினை ஏந்தி நிற்கிறார்.
ஈவெரா என்றும் தந்தை பெரியார் என்றும் அழைக்கப்படும் ஈ வெ ராமசாமி.. 'கடவுள் இல்லை.. கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி' என்று சொல்லியிருக்கிறார். அந்த வசனத்தை நினைவூட்டும் வகையில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் வசனம் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 2ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது வடக்குப்பட்டி ராமசாமி.
திராவிடர் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பொங்கல் கொண்டாடிய வீடியோவை சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். அதனை பலரும் பதிவிட்டு சந்தானத்திற்கு எதிராக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கருத்து சுதந்திரத்தை பற்றி வகுப்பெடுப்வர்கள் எல்லாம் லைனில் வரவும்..!!#திமுகவின் அழுத்தத்தால் இந்த வீடியோவை நீக்கினார் சந்தானம் இவ்வளவுதான் இவங்க கருத்து சுதந்திரம்..!! pic.twitter.com/72XLqaSxNf
— K.Jayaprakash जयप्रकाश नारायण (@itskJayaprakash) January 15, 2024
சந்தானத்திற்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டுள்ளனர். கருத்து சுதந்திரத்தை பற்றி வகுப்பெடுப்பவர்கள் எல்லாம் லைனில் வரவும்..!!
திமுகவின் அழுத்தத்தால் இந்த வீடியோவை நீக்கினார் சந்தானம் இவ்வளவுதான் இவங்க கருத்து சுதந்திரம் என்றும் பதிவிட்டுள்ளார் ஒரு பதிவர். சினிமா ட்ரைலர் வசனத்தினால் சர்ச்சையில் சிக்கியுள்ள சந்தானம் வீடியோவை நீக்கியது போல தனது படத்தில் இருந்தும் அந்த வசனத்தை நீக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications