Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரியாரை வம்புக்கு இழுத்த சந்தானம்; வைரல் ஆன பிடிஆர் வீடியோ! களத்தில் யூடியூபர்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரியார் பற்றி நடிகர் சந்தானம் பேசிய வசனம் திராவிட இயக்கத்தினர் மத்தியில் பெரிய புயலைக் கிளப்பி உள்ளது.

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் ட்ரெய்லர் சில தினங்கள் முன்னதாக வெளியானது. இதுவரை அந்த ட்ரெய்லரை 9 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கண்டு ரசித்துள்ளனர். அந்தப் படத்தின் தலைப்பிலேயே 'ராமசாமி' என்று வருகிறது.

Santhanams trailer is becoming a controversy on social media

இந்த 'வடக்குப்பட்டி ராமசாமி' என்ற தலைப்பு கவுண்ட மணியின் பழைய காமெடியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படி கவுண்ட மணியின் பல காமெடிகளை மறைமுகமாகக் காப்பி அடித்துள்ளார் சந்தானம்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் ஆரம்பிக்கும்போதே, 'உங்க பையனை ராமசாமி தான் கொண்டுவந்து சேர்த்ததாக சொன்னீங்களே? அவன் மேல ஏதேனும் சந்தேகம் இருக்கா?' என்றுதான் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக நடிகர் சந்தானம் மலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள கோயில் ஒன்று திருவிழாவில் கலந்துகொள்வதைப் போன்று காட்சி வருகிறது. அதில், 'ஏண்டா டேய்! ஊருக்குள்ள சாமீயே இல்லைனு சொல்லிக்கிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமிதானே நீ?' என்று ஒரு குரல் ஒலிக்கிறது.

Santhanams trailer is becoming a controversy on social media

அப்போது சந்தானம் மிக தெனாவட்டாக சோம்பல் முறிப்பதைப் போல் பேக் போஸ் இல் காட்சி தருகிறார். அந்தக் குரலைத் தொடர்ந்து, சந்தானம் 'நான் அந்த ராமசாமி இல்லை' என்று கூறுகிறார்.

அந்த வசனம் தான் இப்போது திராவிட இயக்கத்தினர் மத்தியில் பெரிய சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. கூடவே வலதுசாரி ஆதரவாளர்கள் சிலர், உதயநிதியை டார்கெட் செய்து கருத்து போடுகிறார்கள். இந்தப் படத்தை உதயநிதியின் ரெண்ட் ஜெயண்ட் மூவிதான் வெளியிடுகிறது. ஆகவே, சிலர் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

குறிப்பாக திமுக மற்றும் திராவிட இயக்க ஆதரவான யூடியூப்கள் சந்தானத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக u2 brutus யூடியூப்பர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Santhanams trailer is becoming a controversy on social media

அதில், தொடங்கும்போதே இந்தப் படத்தைப் பற்றி என்னதான் பேசப்போகிறோம் என்று ஆதங்கத்துடன் தொடங்குகிறார் ஒருவர். அதற்கு மைனர் வீரமணி 'இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட்தான் வாங்கி வெளியிடப் போகிறது. இப்ப சொல்லுங்க.. பேசுவதற்கு இதில் விசயம் இருக்கா இல்லையா?' என்று பேசத் தொடங்குகிறார்.

நடிகர் சந்தானம், கோயில்களை அறநிலையத்துறை நிர்வகிக்கக் கூடாது என்று ஜக்கி வாசுதேவ் குரல் எழுப்பிய போது அதற்கு ஆதரவாக நின்றார். அந்தச் சமயத்தில் முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சந்தானத்தைத் தீய சக்தி என்று மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தார்.

அந்தப் பழைய வீடியோவையும் இப்போது நெட்டிசன்கள் பலர் எடுத்து வைரலாக பரப்பி வருகின்றனர்.

Santhanams trailer is becoming a controversy on social media

இந்தச் சர்ச்சைகள் தொடங்குவதற்கு முன்னதாக தனது எக்ஸ் தளத்தில் படத்தின் ட்ரெய்லரை பகிர்ந்திருந்த சந்தானம், அதற்கு அந்த ராமசாமி நான் இல்ல! என்று தலைப்பு கொடுத்திருந்தார். எதிர்ப்பு வலுக்கவே சைலண்ட் ஆக அந்தத் தலைப்பைச் சந்தானம் நீக்கிவிட்டார்.

ஆனாலும், அவரைப் பலரும் டார்கெட் செய்து வருகின்றனர். 'வேறு சாதித் தலைவர்கள் பற்றி இப்படி வெளிப்படையாக ஒரு ட்ரெய்லரில் வசனம் பேசி வெளியிட்டுவிட முடியுமா?' என்று பலரும் காட்டமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எப்படியோ சந்தானம் டீம் இந்தச் சின்ன வசனத்தை வைத்து 9 மில்லியன் வீவ்ஸ் ஐ 5 நாள்களில் அடைந்துவிட்டார். அவரது ட்ரெய்லர் எல்லாம் அந்தளவுக்குப் போவது கஷ்டம்.

அவர் நாயகனாக நடிக்க ஆரம்பித்த பிறகு காமெடியன் ஆக இருந்த அளவுக்கு அவருக்கு மார்கெட் இல்லை. ஆகவேதான் இந்தக் குசும்பு வேலைகளை ட்ரெய்லரில் செய்துள்ளார் என்றும் சிலர் கருத்திட்டு வருகின்றனர்.

இந்தச் சர்ச்சையில் திராவிட இயக்கத்தினர் சந்தானத்தை டார்கெட் செய்கிறார்கள். இன்னொரு பக்கம் வலதுசாரிகள் உதயநிதி இந்தப் படத்தை வெளியிடுகிறார் என அவரை டார்கெட் செய்கிறார்கள். இதற்கு நடுவில் நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் உதயநிதியை மிகக் கடுமையாகத் தாக்கி வீடியோ போட்டுள்ளார்.

வேறு சிலர் நயன்தாராவின் 'அன்னபூரணி' படம் நெட்ஃபிக்ஸ் தளத்திலிருந்து நீக்கினார்களே? அப்போது மட்டும் கருத்து சுதந்தரம் பார்த்து விட்டுவிட வேண்டியதுதானே? அப்போது எல்லாம் எங்கே போனது அந்தச் சுதந்தரம் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Santhanams trailer is becoming a controversy on social media

இதைப்போலவே ஜீவா டுடே யூடிப்பர் ஜீவாவும் சந்தானத்தின் இந்தச் செயலை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

"தமிழ்நாட்டில் கட்சிகளுக்குள் வேறுபாடுகள் இருக்கும். ஆனால், அனைவரும் பெரியாரை ஏற்பார்கள். பாமக, மதிமுக, அதிமுக, திமுக, விசிக எனப் பலரும் பெரியாரை ஏற்பார்கள். அதான் உண்மை.

சிலர் கேட்கலாம். பெரியாரை விமர்சிக்கக் கூடாது என்று. கட்டாயம் விமர்சிக்கலாம். என்னை விமர்சிப்பதற்காக உரிமைக்காகவும் சேர்த்துப் போராடுவேன் என்று பெரியார் சொன்னார்.

ஆனால், சந்தானம் அந்தளவுக்கு ஒர்த் கிடையாது. அவர் ஒரு குப்பை. அவருக்கு அறிவே கிடையாது. அவரது படத்தில் கூட நடிப்பவர்களை எல்லாம் அறிவே இல்லாதவர்களாகத்தான் இவர் காட்டுவார். இதற்கு முன்பாக வெளியான அவரது படத்தின் போஸ்டரில் நிர்வாணமாக நின்றவர் சந்தானம்" என்று கொந்தளித்துள்ளார்.

Santhanams trailer is becoming a controversy on social media

அதைப்போல் ப்ளூ சட்டை மாறன், ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "வடநாட்டு ராமசாமி எனும் வடக்குப்பட்டி ராமசாமி. பெரியாரை நக்கலடித்து ட்வீட் வீடியோ போட்டார். எதிர்ப்பு கிளம்பியதும் டெலிட் செய்து விட்டார்.

இவ்வளவுதான் உங்க வீரமா சந்தானம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சாட்டை துரைமுருகன், "சந்தானம் சரியாத்தானே சொல்றார் ! திராவிட ஹைனாக்கள் ஏன் கதறி ஒப்பாரி வைக்கிறார்கள் ?" என்று கேட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+