குன்றத்தூர் சரஸ்வதியின் ஜாக்கெட்டை கவனிச்சீங்களா? சென்னை அரசு விழாவில் திமுக பெண்.. அதென்ன முதுகில்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பகுதியில் நடந்த அரசு விழாவில், மொத்த பேரின் கவனத்தையும் பெண் ஒருவர் ஈர்த்துவிட்டார்.. இந்த பெண் அணிந்து வந்த வினோதமான உடையை பார்த்து விழாவுக்கு வந்திருந்தவர்கள் முகம் சுளித்து சென்றுள்ளார்கள்.. பொது நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதி ஒருவர் சர்ச்சைக்குரிய உடையை அணிந்து வந்தது அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாகியுள்ளது. என்ன நடந்தது குன்றத்தூரில்?

பெண்கள் குறித்து பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்தியப் பிரதேச அமைச்சருமான கைலாஷ் விஜய்வர்கியா சமீபத்தில் வெளியிட்டிருந்த கருத்து பெரும் விமர்சனத்திற்கு ஆளானது..

Kundrathur Government function Saraswathi Jacket

குட்டையான ஆடைகள்

இந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "மேற்கத்திய நாடுகளில், குறைவான ஆடைகளை அணியும் ஒரு பெண் அழகாகக் கருதப்படுகிறார். நான் அதை ஏற்கவில்லை. தெய்வத்தின் ஒரு வடிவமே பெண் என்று நான் நம்புகிறேன். அவர் நல்ல ஆடைகளை அணிய வேண்டும். குட்டையான ஆடைகளை அணியும் பெண்களை நான் கவர்ச்சிகரமானவராக கருதவில்லை.

சில நேரங்களில் பெண்கள் என்னுடன் செல்ஃபி எடுக்க வருவார்கள். நான் அவர்களிடம், அடுத்த முறை சரியான உடையில் வாருங்கள், பிறகு போட்டா எடுத்துக்கொள்வோம்' என்று கூறுவேன்" என்று கூறியிருந்தது அம்மாநில மக்களின் கவனத்தை பெற்றிருந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களும், கருத்துக்களும் குவிந்தது நினைவிருக்கலாம்.

குன்றத்தூர் அரசு விழா

இந்நிலையில், நம்ம குன்றத்தூரில் ஆடை விவகாரம் ஒரு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள படப்பை பகுதியில், பள்ளிக்கல்வித் துறையின் புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை உட்பட பலர் கலந்து கொண்டனர்.. இதே விழாவில், ஒன்றிய பெண் சேர்மன் சரஸ்வதி மனோகரனும் வந்திருந்தார்.. ஆனால், அவர் அணிந்திருந்த ஜாக்கெட் அனைவரின் கவனத்தையும் இழுத்தது.

ஜாக்கெட் டிசைன்

முதலில் அது ஒரு சாதாரண டிசைன் ஜாக்கெட் போலவே இருந்தது. ஆனால் அருகே சென்றபோது தான், அதன் உண்மையான 'டிசைன்' பலரையும் திக்குமுக்காட செய்துவிட்டது.. ஜாக்கெட்டின் 2 கைகளிலும், முதுகிலும் கல்விக்கடவுள் சரஸ்வதி தேவியின் உருவம் போல் ஓவியம் இருந்தது... அதை உற்றுப்பார்த்தால், சரஸ்வதியின் தேவியின் முகத்துக்கு பதிலாக, சேர்மனின் முகமே பதிக்கப்பட்டிருந்தது!

கல்விக்கடவுள் - சேர்மனின் முகம்

இது பார்த்தவுடன் பலர் பதறி போனார்கள். முக்கியமாக, அங்கிருந்த பெண்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.. "இது என்ன அக்கிரமம்? இந்த பெயிண்ட்டிங் டிசைன் ஜாக்கெட் வரை வந்துவிட்டதே" என்று முணுமுணுத்து கொண்டனர். ஒருசிலர் இந்த ஜாக்கெட்டை பார்த்து அப்படியே முகம் சுளித்து விட்டு சென்று விட்டார்கள்.

பெண் அணிந்து வந்த ஜாக்கெட்தான், சோஷியல் மீடியாவிலும் பேசுபொருளாக மாறி வருகிறது... "கல்வித் துறையின் நிகழ்ச்சி என்றால் கடவுள் சம்பந்தப்பட்ட மரியாதை குறைந்தபட்சமாவது பாதுகாக்கப்படவேண்டாமா? இப்படியா நிகழ்ச்சிக்கே முரணான உடையை அணிந்து வருவது?

திமுக பெண் சேர்மன்

மக்கள் பிரதிநிதி ஒருவர் பொதுவிழாவில் இப்படியா வருவது?,கடவுள் உருவத்துக்கு பதிலாக தன்னுடைய முகத்தை பொருத்த எப்படி மனம் வந்தது? எந்த கட்சியாயினும் இப்படிசெய்திருப்பது தவறுதான்.. சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இணையத்தில் தாறுமாறான கமெண்ட்கள் பதிவாகி கொண்டிருக்கின்றன..

மொத்தத்தில் தமிழக அமைச்சர்கள் வருகை, கட்டிட திறப்பு, பேச்சுகள்... இவை அனைத்தையும் மிஞ்சித் தீவிரமாக பேசப்பட்டு வருவது, திமுக ஒன்றிய சேர்மன் சரஸ்வதி மனோகரனின் ஜாக்கெட் தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+