Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நட்டாற்றில் விட்ட பாஜக.. பரிதாப நிலையில் சரத்குமார்! அழுத்தி சொன்ன நிர்வாகிகள்.. போட போறாரு மீட்டிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கும் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவுடன் இணைத்தார். இந்த நிலையில் எதிர்பார்த்தபடி அவருக்கு பதவி கிடைக்காததால் மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தூசு தட்டி எடுக்கப் போவதாக கடந்த சில நாட்களாக தகவல் உலாவி வந்தது. இந்த நிலையில் விரைவில் தனது ஆதரவாளர்களை திரட்டி சரத்குமார் ஆலோசனை நடத்தப் போவதாகவும், கட்சி தொடர்பான அறிவிப்பு விரைவில் வரலாம் என்கின்றனர்.

தமிழ் சினிமாவில் இருந்து நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. எம்ஜிஆர் தொடங்கி லேட்டஸ்ட் வருவாய் விஜய் வரை பலர் அரசியல் அதிகாரம் பூசி இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் தான் சரத்குமார்.

வில்லனாக அறிமுகமாகி நாயகனாக அவதாரம் எடுத்து 1990 காலகட்டங்களில் மிகவும் பிசியாக சினிமாவில் வளம் வந்தவர் சரத்குமார். 1996 இல் அரசியலில் கால் எடுத்து வைத்தார். அப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் திமுக ஆட்சி அமைத்த நிலையில் கலைஞர் கருணாநிதிக்கு நெருக்கமானார் சரத்குமார்.

Sarath Kumar bjp politics

சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்காக 1998இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் சரத்குமார் தோல்வியை சந்தித்தாலும் 2001 இல் சரத்குமாருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி திமுக சார்பில் அளிக்கப்பட்டது. ஆனால் கட்சியின் சிலரால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி திமுகவில் இருந்து விலகிய சரத்குமார், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். ஆனால் சில மாதங்களிலேயே நடிகர் சங்க விவகாரம், சினிமா தொழில் உள்ளிட்டவை காரணமாக அதிமுகவிலிருந்து விலகினார்.

அப்போதுதான் 2025 இல் விஜயகாந்த் தேமுதிக தொடங்கியிருந்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு நடிகருக்கும் மீண்டும் அரசியல் ஆசையை துளிர்த்தது. அதில் சரத்குமார் ஒருவர். 2007 ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். 2009 ஆம் ஆண்டு பாஜக கூட்டணியில் இணைந்து தோல்வியை சந்தித்தார். அதே நேரத்தில் 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தார். தென்காசி நாங்குநேரி, தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட்ட நிலையில் தென்காசியில் சரத்குமார் வெற்றி பெற்றார்.

2016 தேர்தலிலும் சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்தது. ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. தொடர்ந்து ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு 2021 தேர்தலில் கமலஹாசன் கூட்டணி அமைத்து. 40 தொகுதிகளில் அந்த கூட்டணி போட்டியிட்டது. ஆனாலும் அனைத்திலும் தோல்வி தான் இந்த நிலையில் தான். 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை முன்னிலையில் தனது கட்சியை பாஜகவில் இணைப்பதாக கூறினார். மேலும் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட்டால் நாட்டுக்கு நல்லது என நள்ளிரவில் அண்ணாமலையிடம் கட்சியை இணைப்பதாக பேசினேன் என அவர் பேசியது ட்ரோல் மெட்டீரியல் ஆனது.

இந்த நிலையில் கட்சியில் சேர்ந்த தனக்கு பெரிய பொறுப்பு வழங்கப்படும் என சரத்குமார் எதிர்பார்த்தார். ஆனால் அண்ணாமலை இருந்தவரை அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை. நயினார் நாகேந்திரன் தலைவரானதுக்கு பிறகும் தனக்கு பதவி கிடைக்கும் என சரத்குமார் ஆர்வத்தோடு காத்திருந்த நிலையில் அதற்கும் விடை கிடைக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரனை சரத்குமார் நேரில் சந்தித்து தனக்கு பதவியும் தனது ஆதரவாளர்களுக்கு பதவி தருவதாக சொன்னீர்களே என நினைவு படுத்தியதாகவும், தேசிய தலைமை முடிவெடுக்கும் என நயினார் நாகேந்திரன் கூறியதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கலாம் என சரத்குமார் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள் தொடங்கி ஒன்றிய செயலாளர்கள் வரை பல ஆண்டுகளாக கட்டிக் காத்த கட்சி கட்டமைப்பு தற்போது துள்தூளாகிவிட்டது. பதவியில் இருக்கிறோமோ இல்லையோ ஒரு கட்சியின் மாவட்ட செயலாளர் என்ற பெருமையோடு வந்தவர்கள் தற்போது மன உளைச்சலில் இருக்கிறார்கள் என பலர் அவரிடம் கொட்டி தீர்த்தார்களாம்.

இதனால் மீண்டும் சமத்துவ மக்கள் கட்சி தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. விரைவில் சென்னையில் தனது ஆதரவாளர்களை சந்திக்க இருக்கிறார் சரத்குமார். அதற்கான ஏற்பாடுகள் தற்போது மறைமுகமாக நடைபெற்று வருவதாகவும் மண்டல அளவிலான நிர்வாகிகளை அழைத்து சரத்குமார் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் மாவட்ட செயலாளர்கள் சந்திப்பும் அதற்குப் பிறகு ஆதரவாளர்கள் உடனான ஆலோசனை நிகழ்ச்சியும் நடைபெறும் என்கிறார்கள். அந்த கூட்டத்தின் போது அல்லது அதற்கு பிறகு சரத்குமாரின் முடிவு குறித்த தகவல் வெளியாகும் என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+