சரத்குமார் 2015 இல் செய்த தரமான சம்பவம்.. 6 ஆண்டுகள் கழித்து வைரல்.. "கடவுளே.. கடவுளே.."
சென்னை: நடுரோட்டில் வேன் டிரைவரின் என்ஜின் பகுதியில் இருந்த பாம்பை சரத்குமார் லாவகமாக பிடித்து நேற்றுடன் 6 ஆண்டுகள் ஆன நிலையில் அவர் வெளியிட்டிருந்த பழைய அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த 2011- 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி தேர்தலை சந்தித்தது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் வென்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் எம்எல்ஏவாக இருந்த போது நடுரோட்டில் இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார். இதை அக்கட்சி அறிக்கையாக வெளியிட்டிருந்தது.

அறிக்கை
அந்த கட்சி வெளியிட்டிருந்த அறிக்கையில் இன்று (2.7.2015) மாலை 4.30 மணிக்கு சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் எம்எல்ஏ கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ராடன் நிறுவன அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

வேன்
அங்கு போய் விட்டு திரும்பும் போது நடுரோட்டின் குறுக்கே வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. போக்குவரத்து தடை இருந்தது. அப்போது வேன் டிரைவர் என்ஜின் பகுதியை ஒரு குச்சியால் அடித்துக் கொண்டிருந்தார். தலைவர் சரத்குமார் கீழே இறங்கி சென்று என்னவென்று கேட்டார்.

லாவகமாக பிடித்த சரத்
ஓட்டுநர், "சார் பாம்பு ஒன்று உள்ளே இருந்து கொண்டு வெளியே வராமல் இருக்கிறது" என்றார். சொன்னவுடன் ஓட்டுநரிடம் இருந்து குச்சியை வாங்கி தூர எறிந்து விட்டு அந்த பச்சை பாம்பை கையால் பிடித்து கீழே வீசினார். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் பயந்து ஓடினார்கள்.

போக்குவரத்து சரி
சில நொடிகளில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் என்ற போதிலும் நேற்று ஜூலை 2 என்பதால் இந்த அறிக்கை வைரலாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications